தயவு செய்து எங்கிட்ட வராதீங்க...! கார்த்தியை மாட்டி விடும் செல்வராகவன்...
2010 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் செல்வராகவன் இயக்கிய பிரம்மாண்டமான படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படத்தில் ஆண்டிரியா, ரீமாசென், பார்த்திபன் உட்பட பலரும் நடித்திருந்தனர். இந்த படம் கணிசமான வெற்றியை பெற்றது.
பழங்கால கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு திரில்லரான படமாக விளங்கியது. படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட். செல்வராகவனின் கெரியரில் ரசிகர்களால் அதிகமாக கவரப்பட்ட படங்கள் புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன்.
இந்த இரண்டு படங்களின் இரண்டாம் பாகத்தை மீண்டும் திரைக்கு கொண்டுவரும் படி ரசிகர்கள் கேட்டுக் கொண்டே இருக்கின்றனர். மேலும் இந்த இரண்டு படங்களும் சற்று முன்கூட்டியே வந்து ஓரளவிற்கு வெற்றி பெற்ற படங்களாகும். உண்மையில் இந்த காலகட்டத்தில் வந்திருந்தால் செல்வராகவனின் மார்க்கெட்டே வேற லெவலில் இருந்திருக்கும்.
ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை பற்றி செல்வராகவனிடம் தொடர்ந்து ரசிகர்கள் கேட்டு வர அதற்கு நான் இரண்டாம் பாகத்தின் பாதி கதையை தாண்டி விட்டேன். நான் மட்டும் முக்கியமில்லை இந்த படத்திற்கு. முக்கியமாக நடிகர் கார்த்தி வேண்டும். அவர் வந்தால் தயாராகி விடும். இனிமேல் இந்த படத்தை பற்றி எதாவது கேள்விகள் இருந்தால் தயவுசெய்து கார்த்தியிடமே கேளுங்கள் என கூறினார்.