செல்வராகவனின் உதவியாளராக இருப்பது கொடுமை… என்னால அவரோட நடிக்கவே முடியலை… சீனியர் நடிகர் சொன்ன ஷாக்…

Published on: May 10, 2024
---Advertisement---

Selvaraghavan: இயக்குனர் செல்வராகவனிடம் நடிப்பதே கஷ்டம் என்னும் போது அவரோட உதவியாளராக இருப்பதெல்லாம் கொடுமை என நடிகர் ஒருவர் கூறி இருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

கடனில் இருந்த கஸ்தூரிராஜாவிடம் மேலும் சில லட்சம் கடன் வாங்கி தர சொல்கிறார் செல்வராகவன். இருந்தும் மகன் மேல் இருந்த நம்பிக்கையில் அவர் பணத்தை கொடுக்க தனுஷை வைத்து துள்ளுவதோ இளமை படத்தை இயக்குகிறார். ஆனால் அப்போது அவர் முதல் பட இயக்குனர் என்பதால் தன் பெயருக்கு பதில் கஸ்தூரிராஜா பெயர் போட்டுக்கொள்கிறார்.

இதையும் படிங்க: ஒரு விளம்பரத்துக்கு 2 கோடியா? பெரிய தொகை கொடுத்தும் வேண்டாம் என மறுத்த சாய் பல்லவி…

 முதல் சில நாட்கள் படத்தின் வசூல் குறைந்து காணப்பட்டாலும் அடுத்தடுத்த நாட்களில் படத்திற்கு வரவேற்பு அதிகரித்தது. இதை தொடர்ந்து செல்வராகவனும் கோலிவுட்டில் இயக்குனராக அடியெடுத்து வைத்தார். அவர் இயக்கத்தில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன உள்ளிட்ட படங்களை இயக்கி வெற்றி இயக்குனராக மாறினார். தன்னுடைய  நாயகிகளில் ஒருவரான சோனியா அகர்வாலை திருமணம் செய்துக்கொண்டார்.

ஆனால் அவர்கள் திருமணம் சில வருடம் மட்டுமே நீடித்த நிலையில் விவகாரத்து செய்து கொண்டனர். பின்னர் கீதாஞ்சலி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். தற்போது ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தினை தனுஷை வைத்து இயக்க இருப்பதாக அறிவித்து இருக்கிறார். இந்நிலையில் பிரபல நடிகர் பாவா லட்சுமணன், நான் புதுப்பேட்டை படத்தில் இரண்டு நாள் நடித்தேன்.

இதையும் படிங்க: அந்த பாட்டு இல்லாததால் விஜயகாந்த் படத்தை வாங்க மறுத்த வினியோகஸ்தர்கள்! என்ன பாடல் தெரியுமா?

ஆனால் செல்வராகவன் என்னை நடிப்பு வரவில்லை என கூறி திட்டிக் கொண்டே இருந்தார். பலர் முன்னிலையில் என்னை கெட்ட வார்த்தை கூறியும் திட்டினார். இதற்கு மேல் அங்கு இருப்பது சரியில்லை என நினைத்து படத்திலிருந்து விலகி விட்டேன். அவருடன் நடிப்பதே கஷ்டம். உதவியாளராக இருந்தால் அது பெரிய கொடுமை. அவருடைய உதவியாளர்கள் எல்லாம் செல்வராகவன் வந்தாலே ஓடிப்போய் ஒளிந்து கொள்வார்கள் எனவும் தெரிவித்திருக்கிறார்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.