நாளைக்கு டைவர்ஸ்!.. தனுஷுக்கு இப்படி ஒரு அட்வைஸ் தேவையா?!.. செல்வராகவன் செஞ்ச வேலைய பாருங்க!..

dhanush
நடிகர் தனுஷுக்கு நாளை விவாகரத்து ஆகப்போகும் நிலையில் அண்ணன் செல்வராகவன் அவருக்கு கொடுத்த அட்வைஸ் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தற்போது மிக பிஸியாக நடித்து வருகின்றார். மற்ற இயக்குனர்களின் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தான் சொந்தமாகவும் படங்களை இயக்கி வருகின்றார். அந்த வகையில் இவர் தற்போது இயக்கி முடித்திருக்கும் திரைப்படம் நிலவுக்கு என்னடி என்மேல் கோபம். இந்த திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் நேற்று வெளியாகி ட்ரெண்டிங்கில் இருக்கின்றது.
இதையும் படிங்க: எனக்கு போட்டின்னு யாருமே கிடையாது!.. அகில உலக சூப்பர்ஸ்டார் பட்டம் பற்றி பேசிய சிவா…
இந்த திரைப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது இட்லி கடை என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு 75% முடிவடைந்துவிட்டது. வருகிற ஏப்ரல் 10-ம் தேதி இந்த திரைப்படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தாலும் அதை எல்லாம் தாண்டி நடிகர் தனுஷ் சினிமாவில் ஒரு வெற்றி நாயகனாக வலம் வருகின்றார். இவர் ஆரம்பத்தில் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு செல்வராகவன் எழுதி இயக்கி வெளியான திரைப்படம் மயக்கம் என்ன.
இந்த திரைப்படத்தில் தனுஷ், ரிச்சா லங்கெல்லா, சுந்தர் ராமு, பூஜா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருப்பார். தனுஷுக்கு ஜோடியாக ரிச்சா நடித்திருந்த கதாபாத்திரம் யாமினி. இந்த கதாபாத்திரம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
மயக்கம் என்ன படத்தை பார்த்த பல இளைஞர்கள் தனக்கும் யாமினி போன்று பெண் வாழ்க்கை துணையாக வரவேண்டும் என்று பல இடங்களில் கூறி இருக்கிறார்கள். ஆனால் தனுஷ் கதாபாத்திரத்திற்கு இந்த படத்தில் மிகப்பெரிய எதிர்ப்பு இருந்தது. சைக்கோ போல் இருக்கும் ஒரு ஆணுக்காக ஒரு பெண் தனது வாழ்க்கையை முற்றிலும் தியாகம் செய்வது எந்த விதத்தில் சரியாக இருக்கும் என்று பலரும் விமர்சித்து வந்தார்கள்.
இதையும் படிங்க: தென்னிந்திய சினிமாவில் யாரும் செய்திடாத சாதனை!.. 100 மில்லியன்!.. கெத்து காட்டிய சிவகார்த்திகேயன்!..
ஆனால் இது ஒரு சிறந்த வெற்றி படமாக அமைந்திருந்தது. இப்படம் வெளியாகி நேற்றுடன் 13 ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இயக்குனரும் தனுஷின் அண்ணனுமான செல்வராகவனும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கின்றார்.

selvaraghavan
அதில் 'உன்னுடைய யாமினியை மட்டும் நீ கண்டுபிடித்து விட்டால், இந்த உலகத்திலேயே நீதான் அதிர்ஷ்டசாலி' என்று கமெண்ட் செய்திருக்கின்றார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் நடிகர் தனுஷுக்கு நாளை விவாகரத்து ஆகும் சமயத்தில் இப்படி ஒரு அட்வைஸ் தேவையா? என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.