ஹாலிவுட்ட காப்பி அடிக்குறதுக்கு பதிலா பத்து பேருக்கு சோறு போடலாம்!.. ஷங்கரை விளாசிய செல்வராகவன்..
தெலுங்கில் பெரும் பட்ஜெட்டில் படம் எடுக்க இயக்குனர் ராஜ மெளலி இருப்பது போல தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக சங்கர் இருக்கிறார். இயக்குனர் சங்கர் சினிமாவிற்கு வந்த ஆரம்பக்கட்டம் முதலே அவர் இயக்கும் திரைப்படங்களுக்கு ஆகும் செலவு அதிகமாகத்தான் இருக்கும்.
ஒருவேளை படத்தில் செலவு குறைவாக இருந்தால் உடனே பாட்டுக்கு அதிக செலவு செய்து அதை சரிக்கட்டிவிடுவார். அந்நியன் படத்தில் அண்டக்காக்கா கொண்டக்காரி பாடலுக்காக ஒரு ரயில் மலை என பல இடங்களில் பிரமாண்டமாக படம் வரைந்து செலவு செய்திருப்பார்.
சிவாஜி படத்திலும் ஒரு பாடலுக்கு இப்படி ஒரு செலவு செய்திருந்தார். தீ தீ தீ என ஒரு பாடல் வரும். அதில் ஒரு காட்சியில் ரஜினி துப்பாக்கியை தூக்கி எறிவார். அது தானாகவே பறந்து சென்று எதிரியை சுட்டுவிட்டு மறுபடி ரஜினியின் கைகளுக்கு வரும். அதே போல மற்றொரு காட்சியில் எதிரி ரஜினியை சுட்டதும் அந்த குண்டு ரஜினி அருகில் வந்து அப்படியே நின்றுவிடும்.
பிறகு அவர் கையில் வைத்திருக்கும் க்ளாஸில் குண்டு விழுந்துவிடும். இந்த காட்சிகளை படமாக்குவதற்காக கோடி கணக்கில் செலவு செய்து பல கேமிராக்களை வைத்து படமாக்கினார் சங்கர். இந்த காட்சியை குறித்து இயக்குனர் செல்வராகவன் கூறும்போது இது ஒரு தேவையில்லாத செலவு என்கிறார்.
ஒரு பாடலில் 1 நிமிட காட்சிக்கு எதற்கு கோடி கணக்கில் செலவு செய்ய வேண்டும். அந்த காசை கொண்டு சாப்பாடு இல்லாதவர்களுக்கு சாப்பாடு போட்டிருக்கலாம். மேலும் அந்த காட்சி ஏற்கனவே 2004 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வந்த மேட்ரிக்ஸ் என்னும் திரைப்படத்தில் வந்த காட்சிதான். எனவே ஒரு பாடலுக்கு இவ்வளவு செலவு தேவையில்லாதது எனக் கூறியுள்ளார் செல்வராகவன்.