மீண்டும் பழைய ஃபார்ம்க்கு வரும் செல்வராகவன்… விட்ட இடத்தை பிடிப்பாரா?..

Published on: September 16, 2023
selva raghavan
---Advertisement---

செல்வராகவன் தமிழ் சினிமா இயக்குனர்களில் ஒருவர். இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் சில படங்களில் நடித்தும் உள்ளார். இவர் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் படங்களை இயக்கியுள்ளார். இவர் சின்மா நடிகையான சோனியா அகர்வாலை திருமணம் செய்தார்.

ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து கொண்டனர். பின் இவர் இரண்டாம் திருமணமும் செய்து கொண்டார். இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

இதையும் வாசிங்க:இத கேட்க நீங்க யாரு… காரசாரமாக கத்திய இளையராஜா… விஷமமாக வேலை பார்த்த ரஜினிகாந்த்!

பின் 7ஜி ரெயின்போ காலனி, மயக்கம் என்ன, யாரடி நீ மோகினி போன்ற திரைப்படங்களை இயக்கினார். மேலும் பீஸ்ட், நானே வருவேன், மார்க் ஆண்டனி முதலிய திரைப்படக்களில் நடித்தும் உள்ளார். இவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் வெற்றி அடைந்தன. இவர் நடிகர் தனுஷின் சகோதரரும் கூட. இவர் தமிழில் இயக்கிய யாரடி நீ மோகினி திரைப்படம் தெலுங்கில் வெளியான ஆடவர் மட்டாலகு அர்தலே வெருலு திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இப்படம் தெலுங்கிலும் சரி தமிழிலும் சரி மிக பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

அதைபோல் ரவிகிருஷ்ணா, சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான 7ஜி ரெயின்போ காலனியும் இவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. இதன் இரண்டாம் பாகம் வெளிவரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதன் படபிடிப்புகள் விரைவில் துவங்கவிருக்கின்றன.

இதையும் வாசிங்க:கிரஷ் யார் வேணாலும் இருக்கலாம்! ஆனா இவங்கள மாதிரி இருக்கமுடியுமா? விஷாலின் அடுத்த ப்ரபோசல்

இந்நிலையில் இவரின் அடுத்த படத்தை பற்றி தகவல்களும் கசிந்துள்ளன. இதன்படி இவர் 7ஜி ரெயின்போ காலனி படம் முடிந்த பின் யாரடி நீ மோகினி திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷனின் இரண்டாம் பாகத்தினை இயக்க முடிவு செய்துள்ளாராம். இதன் முதல் பாகத்தில் திரிஷா மற்றும் தெலுங்கு நடிகரான வெங்கடேஷ் நடித்திருந்தனர்.

அதைபோல் இதன் இரண்டாம் பாகத்திலும் திரிஷாவே கதாநாயகியாக நடிக்க சம்மதம் கூறிவிட்டாராம். ஆனால் ஹீரோவாக வெங்கடேஷ் நடிப்பாரா அல்லது வேறு யாரும் நடிப்பார்களா என்பது பற்றி இன்னமும் தெரியவில்லை. அதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எது எப்படியோ பல நாட்களாக பட வாய்ப்புகள் கிடைக்காத செல்வராகவன் இந்த சந்தர்பத்தை நன்கு பயன்படுத்தி கொள்வார் என தெரிகிறது.

இதையும் வாசிங்க:லைக்கா நிறுவனமாக இருந்தாலும் பாலிசில இருந்து மீறாத அஜித்! தடைகளை தாண்டி மீண்டும் கிளாஷாகும் பிரச்சினை

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.