கதையை பிரசாந்த்தான் கேட்பார்... சூப்பர்ஹிட் படத்துக்கே நோ சொல்லிட்டார்.. இதையா மிஸ் பண்ணாரு?
Prasanth: இயக்குனர் செல்வராகவனின் முதல் திரைப்படத்தில் நடிக்க முதலில் அணுகியது பிரபல நடிகர் பிரசாந்த்தை தான். அவர் மறுத்த பின்னரே அந்த கேரக்டரில் நடிகர் தனுஷ் கோலிவுட் எண்ட்ரி ஆனார் என்ற தகவல் தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரபல இயக்குனர் கஸ்தூரிராஜா சில பிரச்சினைகளால் கோலிவுட்டில் இருந்து வெளியேற முடிவெடுக்கிறார். அந்த சமயத்தில் அவருடைய முதல் மகனான செல்வராகவன் தனக்கு ஒரு தொகையை வாங்கி தாருங்கள். நான் படம் எடுக்க இருக்கிறேன் என கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க: கோட் கிளைமேக்ஸில் தோனியும், விஜயும் ஒரு செம சீன்!.. ஆனா நடக்காம போச்சே!…
அந்த திரைப்படம் தான் துள்ளுவதோ இளமை. இப்படத்தில் நடிகர் தனுஷ் நடித்து இருந்தார். முதலில் இப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்றாலும் அடுத்தடுத்த வாரங்களில் சூப்பர் ஹிட் ஆனது. தொடர்ந்து தனுஷை வைத்து செல்வ ராகவன் இதுவரை ஐந்து திரைப்படங்களை இயக்கியும் இருக்கிறார்.
ஆனால் செல்வராகவன் தன்னுடைய முதல் ஹீரோவாக தனுஷை நேரடியாக தேர்வு செய்து விடவில்லை. முதலில் அவர் துள்ளுவதோ இளமை படத்தின் கதையை பிரசாந்திடம் தான் கூறியிருக்கிறார். அந்த கதையை அவர் தந்தையும் மகனும் கேட்டு இருக்கின்றனர். ஆனால் அந்த படத்தில் தான் நடித்தால் சரியாக இருக்காது என பிரசாந்த் தான் வேண்டாம் என முடிவெடுத்தாராம்.
இதையும் படிங்க: விஜயுக்கு அண்ணியா கேட்டப்ப நோ சொன்ன பிரபல நடிகை… ஆனா பின்னாடி நடந்து செம பிளான்…
வேறு ஏதாவது இள வயது நடிகர்களை வைத்து இயக்கிக் கொள்ளுங்கள் என கூறிவிட்டாராம். பொதுவாக தியாகராஜன் தான் கதையை கேட்டு நிராகரிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் அவர் கொடுத்து இருக்கும் இப்பேட்டியில் பிரசாந்த் தான் கதை கேட்டு பிடிக்கவில்லை என்றால் நேரடியாகவே கூறிவிடுவார் எனக் கூறியிருக்கிறார்.
மேலும், பார்த்தேன் ரசித்தேன் படத்தின் சமயத்தில் இயக்குனர் ஹரியிடம் கதை கேட்டதும் அவர்தான். அதில் ஈர்க்கப்பட்டவர் தமிழ் படத்திலும் நடித்தார். தொடர்ந்து ஜீன்ஸ் போன்ற ஒரு ஹிட் படத்தை கொடுத்து விட்டு கண்ணெதிரே தோன்றினாள் என்ற புதுமுக இயக்குனருக்கும் வாய்ப்பு கொடுத்தார். இப்படி நடிக்க ஒரு நடிகருக்கு துணிச்சல் வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.