தூங்குறதே இல்ல!.. மிருகத்தனமான உழைப்பு!.. தம்பியை ஒரேடியா புகழ்ந்து தள்ளிய செல்வராகவன்!..

by ramya suresh |   ( Updated:2024-11-23 17:01:39  )
selvaraghavan
X

selvaraghavan

நடிகர் தனுஷ் குறித்து அவரது அண்ணன் செல்வராகவன் சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கும் செய்தி வைரலாகி வருகின்றது.

கடந்த சில நாட்களாக சோசியல் மீடியாக்களில் ட்ரெண்டிங்கில் இருப்பது நடிகர் தனுஷ் தான். அதிலும் நயன்தாரா அறிக்கை வெளியானது தொடங்கி தனுஷ் குறித்து ஆளுக்கு ஆள் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். தனது டாக்குமென்டரி படத்தில் நானும் ரவுடிதான் திரைப்படத்திலிருந்து மூன்று வினாடி காட்சிகளை பயன்படுத்தியதற்காக நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டதாக கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார் நடிகை நயன்தாரா.

இதையும் படிங்க: யாரு சொன்னா? அடுத்த தல, தளபதி நாங்கதான்.. கட்டியணைத்து போஸ் கொடுக்கும் சிம்பு – தனுஷ்

இந்த அறிக்கையானது சமூக வலைதள பக்கங்களில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த அறிக்கைக்கு பிறகு நடிகர் தனுஷ் குறித்து பல விமர்சனங்கள் சமூக வலைதள பக்கங்களில் உலா வந்தன. இதற்கிடையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து செய்யும் வழக்கு தொடர்பாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார்.

அதில் தனது மனைவியுடன் சேர்ந்து வாழ்வதற்கு விருப்பமில்லை என்று கூறி பரஸ்பர விவாகரத்திற்கு ஒப்புதல் வழங்கி இருக்கின்றார். அதன்படி வருகிற நவம்பர் 26 ஆம் தேதி இந்த வழக்குக்கு தீர்ப்பு வர உள்ளது. இப்படி தன்னைச் சுற்றி பல சர்ச்சைகள் வந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தனது திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வருகின்றார் நடிகர் தனுஷ்.

கிட்டத்தட்ட கையில் ஒரு டஜன் படங்களை வைத்துக் கொண்டு சுற்றி வருகின்றார். ராயன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்து இரண்டு திரைப்படங்களை இயக்கி முடித்து விட்டார், நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படத்தை முழுவதுமாக முடித்திருக்கும் தனுஷ் அடுத்ததாக இட்லி கடை என்கின்ற திரைப்படத்தையும் முக்கால்வாசி இயக்கி விட்டதாக கூறப்படுகின்றது.

dhanush

dhanush

படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வைரலாகி வருகின்றது. தனுஷ் இயக்கியிருக்கும் நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் திரைப்படம் வருகிற பிப்ரவரி மாதம் காதலர் தினத்தில் வெளியாகும் என்றும், இட்லி கடை திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது. இதற்கிடையில் நடிகர் தனுஷின் அண்ணன் செல்வராகவன் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார்.

அப்போது தனுஷ் குறித்த கேள்விக்கு பதில் அளித்திருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'தனுஷின் கடின உழைப்பை பார்க்கும் போது எனக்கு வியப்பாக இருக்கின்றது. மிருகத்தனமாக உழைத்து வருகின்றார். இரவு, பகல் என தூங்காமல் ஓடிக்கொண்டே இருக்கின்றார். அவரை பார்த்தால் பொறாமையாக இருக்கின்றது.

இதையும் படிங்க: எஸ்.ஜே.சூர்யாவுக்குப் பிடிச்ச டயலாக் எதுன்னு தெரியுமா? கேட்டுறாதீங்க… விழுந்து விழுந்து சிரிப்பீங்க!

நாமும் இப்படி இருந்திருக்கலாமோ என்று தோன்றுகின்றது. தனுஷ் இயக்கத்தை பொறுத்தவரையில் அவர் நடிக்கும் போது அவர் சொல்வதை அப்படியே செய்ய வேண்டும் என்று இல்லை. ஆனால் அதை கெடுக்காமல் செய்தால் போதும். என்ன செய்ய வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கக் கூடியவர் தனுஷ்' என்று தனது தம்பி குறித்து மிகவும் பெருமையாக பேசி இருக்கின்றார் இயக்குனர் செல்வராகவன்.

Next Story