செல்வராகவனை சேமியா உப்புமாவா ஆக்கிட்டாங்களே!.. இது யாரு செஞ்ச வேலை தெரியுமா!..

காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான செல்வராகவன் தொடர்ந்து தான் இயக்கிய படங்களின் மூலம் தன்னை ஒரு ஜீனியஸ் இயக்குனர் என்றே நிரூபித்து இருந்தார்.

7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் என வரிசையாக தரமான படைப்புகளை தமிழ் சினிமாவுக்கு வழங்கி வந்தார். ஆனால், பிரம்மாண்ட படங்களை கொடுக்கிறேன் என்கிற பெயரில் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு பிறகு எதார்த்தில் இருந்து விலகிய செல்வராகவனுக்கு இரண்டாம் உலகம் படம் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்து விட்டது.

இதையும் படிங்க: காருக்குள்ள ஜிப்பை கழட்டி விட்டு கண்டதை காட்டுறியேம்மா!.. ஓவியாவை பார்த்து ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!..

அதன் பின்னர் அவர் இயக்கிய படங்கள் சொதப்பி வந்த நிலையில், கடைசியாக தனுஷை வைத்து இயக்கிய நானே வருவேன் படமும் கை கொடுக்கவில்லை. திடீரென விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடிகராக அறிமுகமான செல்வராகவன் தொடர்ந்து சாணிக் காயிதம், பகாசுரன், மார்க் ஆண்டனி உள்ளிட்ட பல படங்களில் நடிகராகவும் புது அவதாரம் எடுத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் சினிமா இயக்கும் முயற்சியை தொடங்கி உள்ள செல்வராகவன் விரைவில் 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: 4 விஜய் படம் பார்த்த மாதிரி இருக்கு!.. ஷாருக்கானை தளபதியா மாற்றிய அட்லீ.. ஜவான் விமர்சனம் இதோ!

நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவரை பிரிந்து விட்டார்.

அந்த படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கீதாஞ்சலியை திருமணம் செய்துக் கொண்டு வாழ்ந்து வரும் செல்வராகவனுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதில், தற்போது அவரது மகள் லிலா அப்பா செல்வராகவனை சேமிய உப்புமா போல பெயின்ட் அடித்த புகைப்படத்தை தற்போது ஷேர் செய்து செல்ல மகளின் சேட்டைகளை ரசிக்கும் அப்பா நான் என பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

 

Related Articles

Next Story