தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக அறிமுகமாகி இன்று ஒரு நடிகராக பல பேரை ஆச்சரியத்தில் திகைத்து வைத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனரும் நடிகருமான செல்வராகவன். இவர் பிரபல இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன் என்பதால் அவருடைய கற்பனைத்திறனும் கூடவே பிறந்திருக்கிறது.
இவர் எடுத்த பெரும்பாலான படங்கள் ஹிஸ்ட்ரியை அடிப்படையாக கொண்டதும் காதலை அடிப்படையாக கொண்டதுமாக அமைந்திருக்கின்றன. ‘காதல் கொண்டேன்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘இரண்டாம் உலகம்’, ‘7ஜி ரெயின்போ காலனி’ போன்ற படங்கள் இவரின் இயக்கத்தில் வெளிவந்த படங்களாகும்.
சமீபத்தில் தனுஷை வைத்து ‘ நானே வருவேன்’ என்ற படத்தை எடுத்தார். ஆனால் இந்த படம் முன்பு வெளியான படங்களின் வெற்றியை பதிவு செய்யவில்லை. ஏற்கெனவே தனுஷை வைத்து காதல் கொண்டேன், துள்ளுவதோ இளமை, மயக்கம் என்ன, புதுப்பேட்டை போன்ற ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.
இதன் மூலம் இயக்குனர்களின் ஹிட் லிஸ்ட் பட்டியலிலும் செல்வராகவன் இடம்பிடித்திருந்தார். திடீரென நடிப்பின் மீது ஆர்வம் வர பீஸ்ட் படத்தின் மூலம் தன் முழு நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். அந்தப் படத்தில் செல்வராகவன் நகைச்சுவையுடன் வெளிப்படுத்தும் வசனங்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு கிடைத்தது.
அதனையடுத்து கீர்த்தி சுரேஷுடன் இணைந்து ‘சாணிக் காயிதம்’ என்ற படத்தில் அபார நடிப்பை வெளிப்படுத்தினார். அந்தப் படம் செல்வராகவனின் பெருமையை உயரத்திற்கு கொண்டு சென்றது. சமீபத்தில் வெளியான ‘பகாசுரன்’ படம் ஓரளவு வரவேற்பை பெற்று வருகிறது.
இத்தனை சிறப்புமிக்க செல்வராகவனின் பெருமையை ஊரே பேசும் போது அவரை காரித்துப்பிய சில பேரை பற்றி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் செல்வராகவன் கூறியிருக்கிறார். பேட்டி எடுத்த நிரூபர் ‘ தனுஷின் மகன்களான யாத்ரா மற்றும் லிங்கா உங்கள் படங்களை விமர்சனம் செய்வார்களா?’என்று கேட்டனர்.
இதையும் படிங்க : ஒரு படத்திற்கு மூன்று இசையமைப்பாளர்களா?.. விளம்பரத்தை பார்த்ததும் பதறிய எம்.எஸ்.வி..
அதற்கு பதிலளித்த செல்வராகவன் ‘அவர்கள் தான் உண்மையான விமர்சகர்கள், படத்தை பார்த்து காரித் துப்புவார்கள், நல்லா இல்லைனா கேவலமா இருக்குனு சொல்வார்கள் மேலும் ஏன் பெரியப்பா இப்படி கேவலமா இருக்குனு கேட்பார்கள்’ என்று செம ஜாலியாக பதிலளித்தார்.
Power Star: தமிழ்…
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…
புஷ்பா 2…