பிரபல ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தயாராகும் செல்வராகவன்… அதிரிபுதிரியாக களமிறங்கும் படக்குழு…

Published on: January 19, 2023
Selvaraghavan
---Advertisement---

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழும் செல்வராகவன், தற்போது தமிழ் சினிமாவின் பிசியான நடிகராக திகழ்ந்து வருகிறார். “பீஸ்ட்”, “சாணி காயிதம்” ஆகிய திரைப்படங்களில் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த செல்வராகவன், தற்போது ‘பகாசூரன்” திரைப்படத்தில் ஹீரோவாக களமிறங்கியுள்ளார்.

Selvaraghavan
Selvaraghavan

செல்வராகவன் இயக்கிய பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் முக்கிய படைப்புகளாக திகழ்ந்தாலும், “புதுப்பேட்டை”, “ஆயிரத்தில் ஒருவன்” போன்ற திரைப்படங்கள் காலத்தை தாண்டியும் பேசப்படும் திரைப்படங்களாக அமைந்திருந்தன. இதில் “ஆயிரத்தில் ஒருவன் 2” திரைப்படம் 2024 ஆம் ஆண்டு வெளிவரும் எனவும் இதில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார் எனவும் அதிகாரப்பூர்வமான அறிவுப்பு வெளிவந்திருந்தது.

அதே போல் “புதுப்பேட்டை 2” திரைப்படத்திற்கான முயற்சிகளும் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவித்தன. ஆதலால் செல்வராகவன் ரசிகர்கள் இத்திரைப்படங்களுக்காக மிகவும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்துவது போல் ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது.

7G Rainbow Colony
7G Rainbow Colony

அதாவது செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான “7ஜி ரெயின்போ காலனி” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக ஒரு சூடான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை செல்வராகவனே இயக்கவுள்ளார். மேலும் “7ஜி ரெயின்போ காலனி” திரைப்படத்தை தயாரித்த ஏ.எம்.ரத்னமே இத்திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் முந்தைய படத்தில் நடித்த ரவி கிருஷ்ணாவே இதில் ஹீரோவாக நடிக்கிறாராம். அதே போல் இத்திரைப்படத்தின் கதாநாயகிக்கான தேடலில் படக்குழு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.