அப்பா - மகன் உறவை இப்படியா காட்டுறது?.. தனுஷ் குடும்பத்தை திட்டிய இயக்குனர்...
சினிமா மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டுமே தவிர தீயவைகளை முன்னிறுத்தக் கூடாது. ஆனால் குழந்தைகள் முழுக்க முழுக்க தொலைக்காட்சி படங்களை பார்ப்பது . விளம்பரங்களை பார்ப்பது என இன்றைய தலைமுறைகள் பெரும்பாலும் சதா டிவியே கதி என தங்கள் நேரத்தை செலவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இப்படி குழந்தைகளில் இருந்தே அவர்கள் மனதில் நல்ல பழக்க வழக்கங்களை மனதில் விதைத்திடும் ஆயுதமாக சினிமா இருக்க வேண்டுமே தவிர அவர்களை நாசம் பண்ணிவிடக் கூடாது. அந்த வகையில் சொசைட்டியை நாசம் பண்ண காரணமாக இருந்தவர்களே செல்வராகவன் குடும்பம் தான் என்று பிரபல இயக்குனர் பிரவீன் காந்தி கூறியிருக்கிறார்.
அவரின் இயக்கத்தில் ஒரு சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்றாலும் நானும் நடிப்பேன் என்று அவர் பிடித்த முரண்டால் இன்று வரை அவரின் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. ரட்சகனில் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அப்பாவாக நடித்தார்.அந்த படத்தில் அப்பா மகன் உறவு சரியான விதத்தில் பிரதிபலித்திருப்பார் பிரவீன் காந்தி.
இதையும் படிங்க : ரஜினியிடமிருந்து சத்தியராஜை பிரித்த கமல்… அட அப்பவே இவ்ளோ பண்னி இருக்காரே!…
அதற்கு காரணம் ஏற்கெனவே பாலசுப்பிரமணியன் காதலன் படத்திலும் பிரபுதேவாவிற்கு அப்பாவாக நடித்து அசத்தியிருப்பார். அப்பா மகன் உறவை மக்களிடம் சரியான முறையில் காட்டிய படமாக காதலன் படம் அமைந்தது. அந்த படம் பார்க்கிறவர்களுக்கே இப்படி ஒரு அப்பா நமக்கு கிடைக்கமாட்டார்களா? என ஏங்க வைக்கும்.
ஆனால் அந்த உறவை சீர்கெடுத்ததே செல்வராகவன் குடும்பம் தான் என்று பிரவீன் காந்தி கூறினார். கஸ்தூரிராஜா செல்வராகன் தனுஷ் கூட்டணியில் அமைந்த படமான துள்ளுவதோ இளமை படத்தில் அப்பா மகன் கதாபாத்திரங்களை இப்படியா காட்டுவார்கள்? அதிலிருந்தே எல்லா படங்களும் பின்பற்ற தொடங்கி விட்டார்கள்.
அப்பா மகன் என்றாலே சண்டை தான் என்ற நிலைமைக்கு இப்பொழுது தள்ளப்பட்டிருக்கிறோம். சொசைட்டியையே நாசம் பண்ணிவிட்டார்கள் என்று பிரவீன் காந்தி தன்னுடைய ஆதங்கத்தை கூறினார்.