பாலசந்தருக்கு ‘நோ’ சொன்ன செல்வராகவன்...அதிர்ந்து போன கஸ்தூரி ராஜா...

செல்வராகவன்
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர் கஸ்தூரி ராஜா. அவர் தனது மகன் செல்வராகவன் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்றை தெரிவித்து இருக்கிறார். தமிழ் சினிமாவில் விசுவிடம் உதவி இயக்குனராக இருந்தவர் கஸ்தூரி ராஜா. ராஜ்கிரண் நடிப்பில் உருவான என் ராசாவின் மனசிலே படம் இவரின் இயக்கத்தில் வெளியான முதல் படம். இவரின் மகன்களான செல்வராகவன் மற்றும் தனுஷ் இருவரும் சினிமாவில் உட்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார்கள்.

செல்வராகவன்
ஆனால், இயக்குனராக செல்வராகவன் சினிமாவில் நுழைய ஆசைப்பட்ட போது கஸ்தூரி ராஜா அதை தடுத்து இருக்கிறார். அமெரிக்காவுக்கு அனுப்பி டெக்ஸ்டைல் பிசினஸில் அவரை பெரிய ஆளாக்க வேண்டும் என்று தான் விரும்பினாராம். இருப்பினும் செல்வராகவன் இயக்குனர் தான் ஆவேன் என பிடிவாதமாக இருந்தாராம்.
இயக்குனர் பாலசந்தரிடம் தன் பிரச்சனையை கூறி செல்வராகவனுக்கு புத்திமதி கூறுங்கள் எனக் கேட்டு இருக்கிறார். அவரும் செல்வாவை அழைத்து பேசினாராம். ஆனால் கஸ்தூரி ராஜாவிடம் அவனுக்கு சினிமாவை ரொம்ப பிடித்திருக்கிறது. கண்டிப்பாக பெரிய ஆளாக வருவான். என்னிடமே இருக்கட்டும் என்றாராம்.

K.Balachandar
அப்போது பாலசந்தர் தமிழ் தொலைக்காட்சி சீரியல் எடுத்துக்கொண்டு இருந்து இருக்கிறார். பத்து நாட்கள் அவரிடம் வேலைக்கு சென்று வந்த செல்வராகவன் அதன் பின்னர் போகவில்லையாம். அவரிடம் என்னவென்று கஸ்தூரி ராஜா கேட்க, அவர் சீரியல் இயக்குகிறார். எனக்கு தேவையாக மைல்லேஜ் அவரிடம் இல்லை எனக் கூறிவிட்டாராம். இதை கேட்ட கஸ்தூரி ராஜா அதிர்ச்சியானதாக ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.