ஏழைகளின் அனிருத்தா..? மேக்கிங் வீடியோ போட்டு கலாய்த்த ஆர்.ஜே.பாலாஜி..!

ரேடியோவில் தொகுப்பாளராக இருந்த ஆர்.ஜே.பாலாஜி தன்னுடைய நகைச்சுவை கலந்த பேச்சால் மக்கள் மனதில்
நின்றவர். சினிமா விமர்சனங்களை தொகுத்து வந்த இவர் சினிமா மீதுள்ள ஆர்வத்தால் நடிக்க வந்தார். ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக தனது பயணத்தை ஆரம்பித்தார்.
அதன் பின் எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களில் நாயகனாக நடித்தார். நடித்த இரண்டு படங்களுமே செம ஹிட். இந்த வெற்றியை தொடர்ந்து இவருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். இவர் தற்போது வீட்ல விஷேசம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் அபர்ணா முரளி ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும் சத்யராஜ், ஊர்வசி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் டிரெய்லரை ஐபிஎல்-ல் ரிலீஸ் செய்தார் பாலாஜி. மேலும் முதல் சிங்கிளான டேடி பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது, இந்த பாடலை பாலாஜியே பாடியுள்ளார். முதலில் அனிருத்தை வைத்து தான் பாட வைக்க வேண்டும் என நினைத்தார்களாம்.
ஆனால் அவருடைய கால்ஷீட் இல்லாததால் பாலாஜியே பாடியுள்ளார். பாடல் கம்போஸ் பண்ண மேக்கிங் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் "அனிருத் ரிலீஸ் ஆகிற எல்லா படங்களிலும் அவர்தான் இசையமைக்கிறார். அதனால் ஏழைகளின் அனிருத்தாகவே மாறி நான் பாடியுள்ளேன்" என்று கூறினார். மேலும் அந்த வீடியோவில் செம ரகள பண்ணியிருக்கிறார் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி.
இதோ அந்த வீடியோ:
Courtesy to Zeestudios