ரஜினிக்கும் கமலுக்கு ஒரே வரியில் அமைந்த பாடல்கள்!.. இதுவரை யாரும் நோட் பண்ணிருக்கீங்களா?..
தமிழ் சினிமாவில் கதைக்காக படங்கள் வெற்றிப் பெறுவது ஒரு பக்கம் இருந்தாலும் பாடலுக்காவும் சில படங்கள் ஓடியிருக்கின்றன. அந்த அளவுக்கு ஏராளமான ஹிட் பாடல்கள் மக்கள் மனதை ஆட் கொண்டிருக்கின்றன. பெரிய பெரிய இசையமைப்பாளர்கள் , பெரிய பெரிய கவிஞர்கள் என தங்கள் ஆளுமைகளை நிலை நாட்டி வந்தனர்.
கவிஞர்களுக்கு என தனியாக ஒரு இலக்கணம் வகுத்து வாழ்ந்து வந்தனர். ஆனால் இப்பொழுது தங்கள் எண்ணத்தில் புலப்படும் கருத்துக்களை வைத்து அவர்கள் மனதில் பட்டதை கவிதைகளாக எழுதி வருகின்றனர். இந்த நிலையில் ஒரே வரியை போட்டு இரு வெவ்வேறான பாடல்களை இசைக்கு ஏற்ப மாற்றியிருக்கின்றனர் அந்த பாடலை எழுதிய கவிஞர்கள்.
1979 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான ‘கல்யாணராமன்’ படத்தில் அமைந்த ‘காதல் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏற்றி வைத்தேன் ’ பாடலை மலேசியா வாசுதேவன் பாட பஞ்சு அருணாச்சலம் பாடலை எழுதியிருப்பார். இதே வரியில் அதே பஞ்சு அருணாச்சலம் ரஜினிக்காகவும் ஒரு பாடலை எழுதியிருந்தார்.
1984 ஆம் ஆண்டு ரஜினியின் நடிப்பில் வெளியான ‘தம்பிக்கு எந்த ஊரு’ படத்தில் ‘காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்’பாடலை எஸ்.பி.பி பாட பஞ்சு அருணாச்சலம் தான் எழுதியிருப்பார். இந்த இரு பாடல்களிலும் உள்ள வரிகளை கொஞ்சம் மாற்றி போட்டு பார்த்தாலே ஒரே அர்த்தத்தை தரும் பாடலாகவே கருதப்படும்.
இதே முறையை கவிஞர் வாலியுன் பின்பற்றியிருக்கிறார். அஜித் நடிப்பில் வெளியான ஆசை திரைப்படத்தில் ‘மீனம்மா,, மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லாவா குளிர் காய்ச்சல் வரும்..அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வேர்த்து விடும்’ என்ற பாடலை கவிஞர் எழுதியிருந்தார்.
ஆனால் இதே வரியை கொஞ்சம் மாற்றியமைத்து காதலர் தினம் படத்தில் சேர்த்து ஒரு சூப்பர் ஹிட் பாடலை கொடுத்திருக்கிறார் வாலி. ‘மழையில் நீ நனைகையில் எனக்கு காய்ச்சல் வரும்..வெயிலில் நீ நடக்கையில் எனக்கு வியர்வை வரும்’ இடையில் வரும் இந்த வரிகள் ஆசை படத்தில் போட்ட அந்த பாடலை சார்ந்தே இருக்கும். எவ்ளோ தான் புதுசா யோசிக்கிறது என்பதற்காக கவிஞர்கள் செய்த உருட்ட பார்த்தீங்களா?
இதையும் படிங்க : ரேவதியின் வீழ்ச்சிக்கு இந்த முக்கிய சம்பவம்தான் காரணம்…! கொஞ்சம் உஷாரா இருந்திருக்கலாம்…