Connect with us

‘வாலி’ படத்தில் இப்படி ஒரு சீனா?.. ச்ச மிஸ் ஆயிடுச்சே!.. எல்லாம் அஜித் செஞ்ச வேலை!..

ajith

Cinema News

‘வாலி’ படத்தில் இப்படி ஒரு சீனா?.. ச்ச மிஸ் ஆயிடுச்சே!.. எல்லாம் அஜித் செஞ்ச வேலை!..

அஜித் கெரியரில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக ‘வாலி’ திரைப்படம் உருவானது. 1991 ஆம் ஆண்டு வெளியான வாலி திரைப்படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் முதன் முதலாக நடித்து அசத்தியிருப்பார். சிம்ரன், ஜோதிகா முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருப்பர்.

ajith1

ajith simran

நடிகர் விவேக் அஜித்திற்கு நண்பராக இந்தப் படத்தில் நடிக்க தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் செம ஹிட் அடித்தது. இதே திரைப்படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்து 2001 ஆம் ஆண்டு வெளியிட கர்நாடகாத்தில் திரையிடப்பட்டு பெங்களூரில் 100 நாள்கள் ஓடி சாதனைப் படைத்தது. இந்தப் படத்தில் நடித்திருக்கும் அஜித் காது கேளாத, வாய் பேச முடியாத ஒரு மாற்றுத்திறனாளியாக நடித்திருப்பார்,

இன்னொரு வேடத்தில் சார்மிங் பாயாக லவ்வபிள் பாயாக மிகவும் எனர்ஜிட்டிக்காக நடித்திருப்பார். இதில் மூத்த சகோதரராக இருக்கும் தேவா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஜித்தான் வில்லனாகவும் நடித்திருப்பார். தனது குறைபாடை யாரும் அறியாத வகையில் மிகவும் தெளிவாக இருப்பதனாலேயே அனைவரிடமும் பாராட்டுக்களை பெறுவார். மேலும் தான் ஒரு பொருள் மீது ஆசைப்பட்டால் அந்தப் பொருள் கிடைக்கிற வரைக்கும் ஓயமாட்டார். அந்த குணமே அவரை அழித்து விடும் என்பது மாதிரியான கதாபாத்திரம் தான் தேவா.

ajith2

ajith2

சிவா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இன்னொரு அஜித் தான் சிம்ரனுக்கு காதலராகவும் கணவராகவும் இருப்பார். தனது கணவரும் கணவரின் சகோதரரும் ஒரே மாதிரி இருப்பதால் அவ்வப்போது குழப்பத்திற்கு ஆளாகுவார் சிம்ரன். ஆனால் முதல் பார்வையிலேயே சிம்ரன் மீது ஒரு ஆசை வைத்து விடுவார் ‘தேவா’ அஜித். அது ஒரு கட்டத்தில் சிம்ரனுக்கு தெரியவர அதன் பிறகு தான் பிரச்சினையே ஆரம்பமாகும்.

இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் திரைக்கதையை திரில்லிங்காக கொண்டு போயிருப்பார் இயக்குனரான எஸ்.ஜே.சூர்யா. சீனுக்கு சீன் மெய்சிலிர்க்க வைக்கிற அளவுக்கு நகர்த்தியிருப்பார். ஆனால் இந்தப் படத்தில் ஒரு அழகான சீனை மிஸ் செய்திருக்கிறார்கள். அதுவும் அஜித்தால் தான் எடுக்கவில்லையாம்.

ajith3

ajith simran

கட்டிலில் படுத்திருக்கும் சிம்ரனை மறைமுகமாக பார்ப்பது போல தொப்பி அணிந்த உருவம் கதவோரம் நின்று கொண்டிருக்கும். ஆனால் பார்ப்பவர்கள் அனைவருக்கும் அது அஜித்தான் என்று தெரியும். ஆனால் எந்த அஜித் என்று தான் தெரியாது. அதே குழப்பம் தான் சிம்ரனுக்கும். அஜித் தொப்பியுடன் உள்ளே வர அண்ணன் அஜித்தான் வருகிறான் என்று பயந்து கொண்டே இருப்பார் சிம்ரன்.

ஆனால் அஜித் தொப்பியை கீழே இறக்கிவிட்டு தான் மீசையை எடுத்துவிட்டதாக காண்பிப்பாராம். மீசை இல்லாமல் இருந்தால் நான்,மீசையோடு இருந்தால் அண்ணன் என்று சிம்ரனிடம் சொல்ல எனக்காக மீசையையே எடுத்துட்டீயா? என்று கட்டி அணைத்துக் கொள்வாராம் சிம்ரன். உடனே அஜித் ‘வா அண்ணனிடம் போய் சொல்லலாம்’என்று கூட்டிக் கொண்டு போக அண்ணன் அஜித் காரை கழுவிக் கொண்டிருப்பாராம்.

ajith4

ajith4

அண்ணே! என்று கூப்பிட திரும்பிப் பார்க்கும் அண்ணன் அஜித்தும் மீசையை எடுத்திருப்பாராம். இதை பார்த்ததும் தம்பி அஜித் விழுந்து விழுந்து சிரிப்பாராம். உடனே பேக்ரவுண்டு மியூசிக்குடன் அண்ணன் அஜித்திற்கு ஏற்ப போட்டு சிகரெட்டை தூக்கிப் பிடிப்பது போல எழுதியிருந்தாராம் எஸ்.ஜே.சூர்யா. ஆனால் அஜித் இந்தப் படத்திற்கு இணையாக வேறொரு படத்திலும் நடித்துக் கொண்டிருந்ததனால் மீசையை எடுக்க முடியாது என்று கூறிவிட்டாராம். அதனாலேயே இந்த சீன் எடுக்கவில்லையாம்.

இதையும் படிங்க : ராஜ்கிரண் படத்தில் இளையராஜா செய்த அற்புதம்… என்னன்னு தெரிஞ்சா ஆடிப்போய்டுவீங்க!!

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top