அஜித் என்ன பெரிய ஆளா?!.. முதியவருக்கு வந்த கோபம்!.. ஓட்டு போட வந்த இடத்தில் நடந்த களேபரம்!..

by சிவா |   ( Updated:2024-04-18 22:13:07  )
ajith
X

தமிழ் சினிமா நடிகர்களில் முக்கிய நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். பொதுவாக எந்த சினிமா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார். அவர் நடிக்கும் படங்கள் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கும் வரமாட்டார். பல வருடங்களுக்கு முன்பு திரையுலகில் அவருக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால் இப்படி மாறிவிட்டார்.

அவரின் படங்கள் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்வதால் தயாரிப்பாளர்களும் அதை கண்டுகொள்வதில்லை. அதோடு, ரஜினி - கமலுக்கு பின் விஜய் - அஜித் என இரண்டு பெரிய நடிகர்களே இருக்கிறார்கள். விஜயும் இப்போது அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்டதால் அவர் தொடர்ந்து நடிப்பாரா என்பது தெரியவில்லை.

இதையும் படிங்க: வடிவேலு சைக்கோன்னு எவன் சொன்னான்!.. இன்னைக்கு வரை கஞ்சி குடிக்கிறதே அவரால தான் – பாவா லட்சுமணன்!..

எனவே, தயாரிப்பாளர்களின் சாய்ஸ் அஜித்தாகவே இருக்கிறது. இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜித். ஆனால், 2 மாதங்கள் மட்டுமே நடந்த படப்பிடிப்பு இப்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு லைக்கா நிறுவனத்தின் நிதி நெருக்கடியே முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.

ஒருபக்கம், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்திற்கும் அஜித் தயாராகி விட்டார். இந்நிலையில், இன்று நடக்கும் பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு போட்டு தனது ஜனநாயக கடமையை ஆற்றி இருக்கிறார் அஜித் குமார். பொதுவாக எங்கு படப்பிடிப்பில் இருந்தாலும் தேர்தலில் ஓட்டு போட சென்னை வந்துவிடுவார் அஜித்.

ajith

துவக்கத்தில் மக்களோடு மக்களாக நின்று ஓட்டு போடு வந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி இருக்கிறது. ஆனால், கடந்த சில வருடங்களாக அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொள்வதால் நேராக உள்ளே சென்று ஓட்டு போட்டு விட்டு சென்றுவிடுகிறார். அப்படித்தான் இன்றும் திருவான்மியூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் அதிகாலை 7 மணிக்கே ஓட்டு போட வந்தார். போலீஸ் அதிகாரிகள் அவரை உள்ளே அனுப்பிவிட்டனர்.

அப்போது அங்கு நின்றிருந்த வயதான ஒருவர் ‘நான் சீனியர் சிட்டிசன். என்ன முதல்ல விடாம அஜித்தை உள்ள விடுறீங்களா?.. அவரை வெளியே அனுப்புங்க’ என சத்தம் போட்டார். அவரை காவல் அதிகாரி ஒருவர் சமாதனம் செய்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story