ரஜினியையே லெஃப்ட் ரைட் வாங்கிய குணச்சித்திர நடிகர்… இவ்வளவு தைரியமா இவருக்கு?

by Arun Prasad |   ( Updated:2023-04-04 09:53:37  )
Rajinikanth
X

Rajinikanth

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த், மிகப் பெரிய செல்வாக்கு பெற்றவர் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். அவ்வளவு பெரிய நடிகரையே ஒரு குணச்சித்திர நடிகர் கண்டித்திருக்கிறார். அவர் யார் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

செந்தாமரை

“வியட்நாம் வீடு”, “அரங்கேற்றம்”, “தூரல் நின்னு போச்சு”, “தம்பிக்கு எந்த ஊரு” போன்ற பல திரைப்படங்களில் நடித்தவர் செந்தாமரை. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் போன்ற பல டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் இவர். குறிப்பாக எம்.ஜி.ஆரின் நாடக மன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் செந்தாமரை. 1950களில் இருந்து 1990கள் வரை சினிமா துறையில் ஜொலித்த செந்தாமரை 1992 ஆம் ஆண்டு இந்த உலகை விட்டு பிரிந்தார்.

செந்தாமரை ரஜினிகாந்த்துடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார். ரஜினிகாந்த்தும் செந்தாமரையும் மிக நெருங்கிய நண்பர்களாகவே வலம் வந்தார்களாம். ஒரு முறை செந்தாமரைக்கு பண பிரச்சனை வந்தபோது பல லட்சம் பணம் கொடுத்து உதவியிருக்கிறார் ரஜினிகாந்த். அந்த அளவுக்கு இருவரும் நெருக்கமான நண்பர்களாக இருந்திருக்கிறார்கள்.

ரஜினியை கண்டித்த செந்தாமரை

இந்த நிலையில் செந்தாமரையின் மனைவியான கௌசல்யா செந்தாமரை சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த்தை செந்தாமரை கண்டித்தது குறித்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

அதாவது ஒரு முறை ரஜினிகாந்த்தின் வீட்டில் அவருக்கும் அவரது மனைவிக்கும் ஒரு பிரச்சனை வந்ததாம். அப்போது செந்தாமரை, ரஜினிகாந்த்திடம், “இதோ பார். நீ என்னை உனது படத்தில் நடிக்க வைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் நீ செய்தது மிகப்பெரிய தவறு. என்னை எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள்” என்று அவரை கண்டித்தாராம். அந்த அளவுக்கு இருவருக்குள்ளும் நட்பு இருந்திருக்கிறது.

Next Story