ப்ளாக் அண்ட் ஒயிட் சினிமா காலங்களில் பெரும்பாலும் நாடகத்தில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகர், நடிகைகளே பின்பு சினிமாவில் காலடி எடுத்து வைப்பார்கள். சினிமா துறையிலும் அப்போது நாடகத்தில் நடிப்பவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டது.
சாவித்திரி, சந்திர பாபு மாதிரியான ஒரு சில கலைஞர்கள் மட்டுமே நாடகத்தில் நடிக்காமல் நேரடியாக சினிமாவிற்கு வந்தவர்கள். இதனால் அப்போது சினிமாவில் பிரபலமாக இருந்த பலரும் நாடக கம்பெனி வைத்திருந்தனர்.
எம்.ஆர் ராதா அவரது நாடக கம்பெனியில் நாடகமாக போட்ட கதையைதான் பிறகு இரத்த கண்ணீர் என்ற படமாக்கினார் என்பது பலரும் அறிந்ததே. அதே போல நடிகர் எம்.ஜி.ஆரும் கூட நாடக கம்பெனி வைத்திருந்தார்.
அந்த நாடக கம்பெனியில் இருந்த பலரும் சினிமாவிற்கு வருவதற்கு அவரே உதவியும் செய்துள்ளார். நடிகை கெளசல்யா செந்தாமரையும் அப்படியாகதான் சினிமாவிற்கு வந்தார். இவர் நடிகர் செந்தாமரையின் மனைவியாவார்.
எம்.ஜி.ஆர் நாடக நிறுவனத்தில் கிடைத்த அனுபவம்:
அவருக்கு சிறு வயதிலேயே சினிமாவின் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. அப்போது அவரது அக்கா ஏற்கனவே எம்.ஜி.ஆரின் நாடக கம்பெனியில் சேர்ந்திருந்தார். எனவே அவர் மூலமாக இவரும் அந்த நாடக கம்பெனியில் சேர்ந்து கொண்டார்.
கெளசல்யா சற்று சுட்டியான பெண்ணாக இருந்தார். ஆனால் எம்.ஜி.ஆர் நாடக நிறுவனத்தில் கடுமையான விதிமுறைகள் உண்டு. அனாவசியமாக பெரிய நடிகர்களோடு பேச கூடாது போன்ற பல விதிமுறைகள் உண்டு. ஆண்களையும் பெண்களையும் தனி தனியாக இருவர் நிர்வகித்து வந்தனர்.
பெண்களை சி.டி ராஜகாந்த் எண்ணும் பெண்தான் கவனித்துக்கொள்வார். எந்த தவறு செய்தாலும் அவங்ககிட்ட செம அடி விழும் என கெளசல்யாவே பேட்டியில் கூறியுள்ளார். அதே போல நடிக்கும்போது ஒருவேளை கீழே விழுந்து கையில் சிராய்த்து இரத்தம் வந்தாலும் அதை துடைத்துவிட்டு அடுத்த காட்சிக்கு நடிக்க செல்ல வேண்டும்.
அவர்கள்தான் நல்ல நடிகர்கள் என அங்கு கூறியுள்ளனர். இந்த பாடங்களே இன்னமும் திரைத்துறையில் தன்னை நிலைத்து நிற்க வைக்கிறது என கூறியுள்ளார் கெளசல்யா செந்தாமரை.
தமிழ் சினிமாவில்…
மாநாடு படம்…
போடா போடி…
Viduthalai 2:…
விடுதலை 2…