கோலிவுட்டில் கொடி கட்டி பறந்த செந்தில்... வாங்காத அட்வான்ஸ் மட்டுமே இவ்வளவா? அதில் என்ன செய்தார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் ஆதிக்கம் செலுத்தி வந்தார் நடிகர் செந்தில். அட்வான்ஸ் கொடுக்கப்பட்டாலும் சில படங்கள் கைவிடப்பட்டு விடும். அத்தகைய தயாரிப்பாளர்கள் தரப்பு கொடுக்கப்பட்ட அட்வான்ஸை செந்திலிடம் இருந்து வாங்காமல் இருந்ததே மிகப்பெரிய தொகை எனக் கூறப்படுகிறது.
நாடகத்தில் சேர்ந்து தன்னுடைய நடிப்புத் திறமைகளை வளர்த்துக் கொண்ட செந்திலுக்கு முதலில் சிறுசிறு வேடங்களே கிடைத்ததாம். தொடர்ச்சியாக படங்கள் நடித்து வந்தவருக்கு மலையூர் மம்பட்டியான் படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இவர் ஏறத்தாழ 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கவுண்டமணியுடன் இவரின் நடிப்பு மிகப்பெரிய அளவில் இவருக்கு பெயரை வாங்கி கொடுத்தது.
இந்த கூட்டணி இருந்தாலே படம் வெற்றி என்ற நிலை இருந்தது. தயாரிப்பாளரிடம் அட்வான்ஸ் வாங்கும் போது செந்தில் இரண்டு கணக்கை வைத்திருப்பாராம். முதலில் வரும் அட்வான்ஸை ஒரு கணக்கில் போட்டு விடுவாராம். பின்னர் படத்தின் போது, அது முடிந்த பின்னரோ கொடுக்கப்படும் சம்பளத்துடன் அட்வான்ஸுடன் இரண்டாவது கணக்கிற்கு பணத்தினை மாற்றி கொள்வார்.
இதில் சில தயாரிப்பாளர்கள் மற்ற பிரச்சனைகளால் படத்தினை கைவிடும் போது செந்திலுக்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸை வாங்காமல் விட்டுவிடுவார்களாம். அப்படி அவருக்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் திரும்பி வாங்கப்படாமல் மிகப்பெரிய தொகை இருந்ததாம். அந்த காசில் ஒரு மிகப்பெரிய வீட்டில் இருக்கிறாராம். இதை தனது சக நடிகரிடம் சொல்லியதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் கசிந்து வருகிறது.