முதல் பாகத்தில் மாஸ் ஹிட் அடித்த திரைப்படங்கள்.. இரண்டாம் பாகத்தில் புஸ்ஸான பரிதாபம்...
தமிழ் சினிமாவில் சில திரைப்படங்கள் மாஸ் ஹிட் அடிக்கும். அட இந்த படம் சூப்பரா இருக்கு போலனு நினைத்த படக்குழு அதற்கு இரண்டாம் பாகம் எடுத்துக் கொண்டு வந்து விடுவார்கள். ஆனால் அந்த படம் முதல் படத்தின் மீது இருந்த மரியாதையே நொறுக்கும் அளவுக்கு போய்விடும்.
சார்லி சாப்ளின் 2:
எங்கள் அண்ணா படத்துக்கு பிறகு தமிழில் இருந்து விலகினார் பிரபுதேவா. மற்ற மொழி படங்களில் பிஸியாக நடித்து விட்டு 12 வருடம் கழித்து தமிழ் சினிமாவுக்கு மீண்டும் திரும்பினார். அந்த நேரத்தில் தயாரிப்பில் மொக்கை படங்களாக ரிலீஸ் செய்து மிகவும் கஷ்டமான சூழலில் இருந்த சக்தி சிதம்பரம். தன்னுடைய சார்லி சாப்ளின் படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுக்க முடிவெடுக்கிறார். அதை தொடர்ந்தே, பிரபு மற்றும் பிரபுதேவாவை வைத்து இந்த பாகத்தினை ரிலீஸ் செய்ய படம் படுமொக்கை வாங்கியது தான் மிச்சம்.
களவாணி 2:
இயக்குனர் சற்குணம் விமல் மற்றும் ஓவியா வைத்து எதார்த்தமான ஒரு நகைச்சுவை படத்தினை கொடுத்திருப்பார். அதிலும் சூரி மற்றும் கஞ்சா கருப்பு ஆகியோருக்கு இடையே நடக்கும் காமெடிக்கே படம் செமையாக அமைந்தது. ஆனால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுக்காமல் இருந்திருக்கலாம் என்பதே உண்மை. சற்குணம் இயக்கிய படங்களிலேயே இது படு மோசம் தான்.
வெண்ணிலா கபடிக்குழு 2:
விஷ்ணு விஷால் நடிப்பில் முதல் படமாக அமைந்தது வெண்ணிலா கபடிக்குழு. இந்த படத்தினை சுசீந்திரன் தான் இயக்கி இருந்தார். சூரிக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுத்த பரோட்டா காமெடி இந்த படத்தில் தான் இடம்பெற்றது. சுசீந்திரன் எழுத்தில் செல்வக்குமார் இயக்கிய படம் தான் வெண்ணிலா கபடிக்குழு 2. இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு பதில் விக்ராந்த் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், கலெக்ஷன் ரீதியாகவும் மொக்கை படமாக ஆனது.
இதையும் படிங்க: ஹாலிவுட்டில் இருந்து தமிழில் காப்பி அடிக்கப்பட்ட டாப் 5 சீன்கள்… அட அந்த இயக்குனர் படக்காட்சிகள் மிஸ்ஸிங்…
நான் அவனில்லை 2:
நடிகர் ஜீவன் நடிப்பில் செல்வா இயக்கிய திரைப்படம் தான் நான் அவனில்லை. ஐந்து நாயகிகள் ஒரு நாயகன் என படம் செம ரீச்சை கொடுத்தது. பாக்ஸ் ஆபிஸ் ஹிட். அதனுடன் சும்மா இல்லாமல் படம் வெளியாகி இரண்டே வருடத்தில் நான் அவனில்லை இரண்டாம் பாகத்தினை ஜீவனை போட்டே வெளியிட்டனர். ஆனால் அந்த படத்தினை இதே மாவை எத்தனை தடவ தான் அரைப்பீங்க என கலாய்ச்சி விட்டனர்.
சாமி 2:
தமிழ் சினிமாவில் போலீஸ் கேரக்டரில் விக்ரமுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது தான் சாமி. டைரக்டர் ஹரிக்கு இது இரண்டாம் படமே மிகப்பெரிய ஹிட்டாகி அவருக்கு கோலிவுட்டில் வெற்றி இயக்குனர் என்ற அந்தஸ்த்தை கொடுத்தது. இவரின் சிங்கம் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற இதுவே இப்படி ஹிட் அடிக்குதே. அப்போ மாஸ் ஹிட் சாமிக்கு இரண்டாம் பாகம் வந்தா என்னமா இருக்கும் என ஐடியா வருகிறது. ஆறுசாமிக்கு மகனை போட்டு அவரை ஹீரோவாக்கி படம் ரிலீஸாகியது. காது ஜவ்வு கிழியாம பலர் தப்பித்ததாக திட்டிவிட்டு போனது தான் மிச்சம்.