என்கிட்ட கொஞ்சம்! அவன்கிட்ட கொஞ்சம்! கண்ட்ராவி - திவ்யாவை பற்றி அர்னவ் திடீர் குற்றச்சாட்டு
சின்னத்திரையில் பல பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டு வருகின்றனர். அதே சமயம் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தும் வருகின்றனர். இதற்கு உதாரணமாக அடுத்தடுத்து நிகழ்ந்த அர்னவ்-திவ்யா மற்றும் விஷ்ணுகாந்த்-சம்யுக்தா போன்ற ஜோடிகளின் சம்பவத்தை கூறலாம்.
சமீப காலமாக விஷ்ணுகாந்த் சம்யுக்தா பிரச்சனை இணையதளங்களில் வெடித்து வரும் நிலையில் மீண்டும் பூதாகரமாக கிளம்பி இருக்கிறது அர்னவ் திவ்யா இவர்களின் பிரச்சனைகள். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
அது நடக்குமா?
அர்னவ் மீது அடுக்கடுக்கான புகார்களை திவ்யா கொடுத்த நிலையில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு அதன் பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். மேலும் திவ்யா ஏற்கனவே கர்ப்பமாக இருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தான் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதனை அடுத்து அந்த குழந்தைக்காவது இருவரும் சேர்ந்து வாழ்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் மீண்டும் ஒருவருக்கொருவர் புகார்களை கூறிக் கொண்டே வந்தனர். அதாவது அர்னவ் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் அதே சமயம் ஒரு திருநங்கையுடனும் தொடர்பு வைத்திருக்கிறார் என்றும் அவர் மீது பல புகார்களை முன் வைத்தார். திவ்யாவின் இந்த குற்றச்சாட்டை அர்னவ் ஏற்க வில்லை .அதற்கு பதிலாக திவ்யா மீது தனது குற்றச்சாட்டையும் அர்னவ் கூறினார்.
வாழ்க்கையை பங்கு போட்ட திவ்யா
அதாவது திருமணமாகி 45 நாட்கள் இருவரும் பேசிக் கொள்ளவே இல்லையாம் அதற்கு காரணமே திவ்யா வேறு ஒருவருடன் தகாத உறவில் இருந்ததாக அர்னவ் கூறியிருக்கிறார். ஆனால் ஏற்கனவே திவ்யா திருமணமானவர் என்றும் அவருடன் விவாகரத்து ஆகிவிட்டது என்று கூறி தான் அர்னவை திருமணம் செய்தாராம். ஆனால் அந்தக் கணவருடன் இன்னும் ரிலேஷன்ஷிப்பில் தான் இருந்திருக்கிறார் என்று அர்னவ் கூறி இருக்கிறார். அதாவது திருமணமாகி 15 நாட்கள் அர்னவுடனும் மீதி 15 நாட்கள் ஊரில் அவரின் கணவரோடும் தான் வாழ்ந்து வந்தாராம் திவ்யா.
இதையும் படிங்க :எம்ஜிஆர் பட பாடலை தொடர்ந்து 50 முறை கேட்ட சிவாஜி!.. என்ன முடிவெடுத்தார் தெரியுமா?..
அதேசமயம் இவர் புழல் சிறையில் இருந்த போது திவ்யா பல நேரங்களில் இரவு பார்ட்டி வைத்தும் கொண்டாடினாராம். இவற்றையெல்லாம் கூறிய அர்னவ் "இதுவரைக்கும் நான் எதையுமே வெளியில் சொல்லவில்லை. எல்லாம் என் குழந்தைக்காக மட்டும் தான். ஆனால் இப்போது இதை சொல்கிறேன் என்றால் அதற்கு காரணம் திவ்யா என்னை பற்றி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைப்பதால் தான்" என்று கூறி இருக்கிறார். இவர்களின் இந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் தான் இப்போது முடங்கி கிடந்த பிரச்சினையை மீண்டும் சுனாமியாக கிளப்பியுள்ளது.