இது ஒரு படமா? மவனே.. டோட்டல் வேஸ்ட்!.. ‘கொட்டுக்காளி’யால் கடுப்பான சீரியல் நடிகர்..

by Rohini |   ( Updated:2024-08-26 12:38:47  )
kottukkali
X

kottukkali

Kottukali Movie: பெர்லின் திரைப்பட விழாவில் மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்ற படமாக கொட்டுக்காளி திரைப்படம் விளங்கியது. அதன் பிறகு இங்கு ரிலீஸ் ஆகி ஓரளவு ரசிகர்களை திருப்திப்படுத்திய நிலையில் இந்த படத்தை பார்த்த சீரியல் நடிகர் அருண் ராஜன் அவருடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்து இருக்கிறார்.

பல சீரியல்களில் ஒரு முன்னணி நடிகராக நடித்துக் கொண்டிருப்பவர் அருண்ராஜன். தற்போது வானத்தைப்போல சீரியலிலும் நடித்து வருகிறார். பெரும்பாலும் ராதிகா எடுக்கும் சீரியலில் இவர் கண்டிப்பாக இடம் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அவர் கொட்டுக்காளி திரைப்படத்தை பற்றி கூறிய கருத்து பின்வருமாறு:

இதையும் படிங்க: மீண்டும் டைரக்‌ஷனில் களமிறங்கும் தனுஷ்… ஆனா இது நடக்கிறதுக்கான காரணமே வேறயாம்…

தலைவலி தாங்க முடியவில்லை. கொட்டுக்களி படத்தின் ஆடியோ விழாவில் இந்த படத்திற்காகவா சிவகார்த்திகேயன் இந்த பேச்சு பேசினீங்க? இந்த படத்தில் அப்படி என்ன இருக்கிறது என இந்த படத்தை நீங்கள் எடுத்தீர்கள்? சீரியஸாக சொல்லுங்கள். இதற்கு எதுக்கு உங்களுக்கு இவ்வளவு ஆட்டிடியூட்? இவ்ளோ பேச்சு? மக்களே நான் சீரியஸாக சொல்கிறேன். இது ஒரு படமும் கிடையாது.

ஒரு டாகுமென்டரியும் கிடையாது. ஒரு குறும்படமும் கிடையாது. ஒரு மண்ணும் கிடையாது. மொத்தமா இந்த படத்திற்கு செலவு எனப் பார்த்தால் 5000 ரூபாய் தான் ஆகியிருக்கும். அதில் சூரிக்கு நான்காயிரம் சம்பளம் கொடுத்து இருப்பார்கள். மீதி ஆயிரம் ரூபாயை வைத்து மற்ற செலவுகளை பார்த்திருப்பார்கள். ஒரு நாளில் எடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன் .

இதையும் படிங்க: கட்சிக் கொடி அறிமுக விழாவில் குடும்பத்தை அழைக்காத விஜய்! இதுதான் காரணமா?

மவனே சாகடித்துவிட்டார்கள். ரொம்ப இரிடேட் ஆகிவிட்டது. அப்படி என்னத்த சொல்ல வந்தீர்கள் இந்த படத்தில்? வாழைப் படம் பார்த்துவிட்டு இரண்டு நாளாக அந்த தாக்கத்திலிருந்து என்னால் மீளவே முடியவில்லை. அப்படி ஒரு நல்ல படம் வாழை. அதன் பிறகு இந்த படத்தை பார்த்து மிகவும் எரிச்சலாகி விட்டது.

arun

arun

மக்களே கலையை வாழ வைக்கலாம். கலைஞர் என்ற பெயரில் படம் பார்க்க வந்த அனைவரையும் லூசாக்கி செருப்பை கழட்டி அடிச்ச மாதிரி ஓட விட்டு இந்த மாதிரி புலம்ப விடக்கூடாது இப்போது மணி ஒன்று ஆகிவிட்டது. இதுவரைக்கும் என்னால் தூங்க கூட முடியவில்லை. அந்த அளவுக்கு இந்த படம் என்னை மிகவும் எரிச்சல் அடைய வைத்திருக்கிறது என கூறி இருக்கிறார் அருண் ராஜன்.

இதையும் படிங்க: கட்சிக் கொடி அறிமுக விழாவில் குடும்பத்தை அழைக்காத விஜய்! இதுதான் காரணமா?

Next Story