பிரபல சீரியல் நடிகரின் மனைவி தீடீர் மரணம்!..ஆழ்ந்த சோகத்தில் மூழ்கிய ஒட்டுமொத்த சின்னத்திரை!..

by Rohini |   ( Updated:2022-10-31 06:12:34  )
bharath_main_cine
X

90களில் பல சீரியல்களில் முன்னனி நடிகராக இருந்தவர் பரத் கல்யாண். இவர் ‘பாட்டாளி’ போன்ற ஒரு சில படங்களிலும் நடித்திருக்கிறார். சில படங்களில் அண்ணன் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

bharath1_cine

சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வரும் பரத்கல்யாணுக்கு பிரியா என்ற மனைவியும் ஒரு மகன் , ஒரு மகள் ஆகியோர் இருக்கின்றனர். இந்த நிலையில் மனைவி பிரியாவுக்கு சில மாதங்களாகவே உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாம்.

இதையும் படிங்க : தர்மசங்கடமான நிலையில் ‘மாவீரன்’ படம்!..பொறுமை இழந்து பொங்கி எழுந்த சிவகார்த்திகேயன்!..

bharath2_cine

40வயதே ஆன மனைவி பிரியா கிட்டத்தட்ட கோமா நிலைக்கு சென்றிருக்கிறார். இப்படி இக்கட்டான நிலையில் இருந்த பிரியா இன்று காலை மரணமடைந்தார். இந்த செய்தியை கேட்டு சின்னத்திரை நடிகர்கள் பலரும் தங்கள் அஞ்சலியையும் ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர்.

bharath3_cine

மேலும் பிரியாவின் சகோதரி வெளியூரில் இருப்பதால் அவர் வந்ததும் நாளை இவரது உடல் அடக்கம் செய்யப்படும் என தெரிகிறது. மனைவியின் பிரிவை தாங்கமுடியாமல் பரத்கல்யாண் தவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story