வாய்ப்பு கேட்டா இதுக்குத்தான் பழகுனியானு கேட்பாரு? அஜித்துக்கும் இந்த சீரியல் நடிகருக்கும் இப்படி ஒரு நட்பா?

by Rohini |
ajith
X

ajith

Actor Ajith: தமிழ் சினிமாவில் அஜித்துக்கு என்ற ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. கோலிவுட்டிலேயே அதிக ரசிகர்கள் பலத்தோடு வலம் வரும் நடிகராக அஜித் இருந்து வருகிறார். சூட்டிங் உண்டு, வீடு உண்டு என தன் வேலையில் மட்டும் கவனமாக இருந்து வருகிறார் அஜித்.

வேறெந்த பிரச்சினைக்கும் செல்லாமல் செய்யும் தொழிலே தெய்வம் என்ற கொள்கையில் விடாப்பிடியாக இருந்து வருகிறார் அஜித். தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வரும் அஜித் எப்படியாவது டிசம்பர் மாதத்திற்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட வேண்டும் என முயற்சியிலும் இருக்கிறார்.

இதையும் படிங்க: உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா?!. முட்டா கூ….ளா?!.. வெடித்த மன்சூர் அலிகான்!..

அதற்காக அஜர்பைஜானிலேயே மொத்த படப்பிடிப்பையும் நடத்து திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் பிரபல சீரியல் நடிகரான தேவ் ஆனந்த் அஜித்தை பற்றி சில சுவாரஸ்ய சம்பவங்களை கூறினார். அதாவது அஜித்தும் தேவ் ஆனந்தும் நல்ல நண்பர்களாம்.

ஆனால் அஜித்தை பார்த்து கிட்டத்தட்ட 18 வருடங்கள் ஆகிவிட்டதாம். உல்லாசம் திரைப்படத்தின் போது அஜித்தின் நண்பர் கதாபாத்திரத்தில் வருவாராம் தேவ் ஆனந்த். அப்போது ஷார்ட் ரெடியானதும் அஜித்தை அழைத்திருக்கிறார்கள்.

dev

dev

இதையும் படிங்க: ரஜினி பேசலாம்.. மன்சூர் அலிகான் பேசக்கூடாதா?!.. திரிஷா விவகாரத்தில் வெடிக்கும் சர்ச்சை..

ஆனால் அஜித் தூங்கி கொண்டிருந்தாராம். உடனே அஜித்தை எழுப்ப பயந்தார்களாம். ஏனெனில் தூங்கும் போது எழுப்பினால் திட்டிவிடுவாரோ என்ற பயத்தில் எழுப்பாமல் இருந்திருக்கிறார்கள். ஆனால் தேவ் ஆனந்த்தான் அஜித்தை மெல்ல தட்ட எழுப்பினாராம்.

அதிலிருந்தே இருவரும் நண்பர்களாகி விட்டார்களாம். ஏவிஎம் ஸ்டூடியோவில் பார்த்தாலும் தேவ் ஆனந்தை காருக்குள் அழைப்பாராம் அஜித். இப்படி இருக்கும் அஜித்திடம் எதாவது வாய்ப்பு கேட்கலாமே என்று கேட்டதற்கு வாய்ப்பு கேட்டா இதுக்குத்தான் என்னிடம் பழகுனியானு கேட்டுவிடக் கூடாது அல்லவா? அதனால்தான் அஜித்திடம் வாய்ப்பு கேட்கவில்லை என்று தேவ் ஆனந்த் கூறினார்.

இதையும் படிங்க: டி.எம்.எஸ் பாடததால் எம்.ஜி.ஆர் வேறு மாதிரி நடித்த பாடல்.. அது சூப்பர் ஹிட் பாட்டாச்சே!..

Next Story