More
Categories: Cinema News latest news

‘வி.ஐ.பி-2’வில் முதலில் நடிக்கவிருந்தது இந்த ‘குக் வித் கோமாளி’ பிரபலமா?.. அவமானப்பட்டு வந்ததுதான் மிச்சம்

VIP 2: தனுஷ் நடிப்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேலையில்லா பட்டதாரி 2. இது 2014 ஆம் ஆண்டு வெளியான வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். இந்த படத்தில் தனுஷ் அமலாபால் விவேக் சரண்யா பொன்வண்ணன் சமுத்திரக்கனி போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர்.

இது ஒரு அதிரடி நகைச்சுவை திரைப்படமாகும். நீண்ட வருடங்களுக்கு பிறகு கஜோல் நடிக்கும் தமிழ் படமாக இந்த படம் வெளியானது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவுக்கு இந்த படத்தின் மூலம் ஒரு கம்பேக் கொடுத்திருந்தார் கஜோல். அதற்கு முன் மின்சார கனவு என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: விஜய்க்கு அஜித்னா!.. கமலுக்கு ரஜினிகாந்த்!.. இவ்வளவு இன்செக்யூரிட்டியா?.. புளூ சட்டை மாறன் தாக்கு!

balaji

இதன் இரண்டு பாகங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் பாலாஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் பாலாஜி மோகன். இவருக்கு பதில் முதலில் இந்த கேரக்டரில் நடிக்க இருந்தவர் குக் வித் கோமாளி  நிகழ்ச்சியில் இருக்கும் ஒரு பிரபலம் என்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

அந்த பிரபலம் வேறு யாருமில்லை. சமீபத்தில் அந்த நிகழ்ச்சியில் இருந்து எவிக்ட் ஆகி வெளியே வந்த வசந்த் வசி என்பவர் தான். பாலாஜி கதாபாத்திரத்தில் முதலில் சௌந்தர்யா ரஜினிகாந்த் வசந்த் வசியை தான் அணுகியிருக்கிறார் .அதுவரை வசந்துவசியை பார்த்ததே இல்லையாம் .ஸ்கிரிப்ட் எல்லாவற்றையும் வசந்த் வசியிடம் கொடுத்துவிட்டு மேக்கப் எல்லாம் போட்டு கேரவனிலிருந்து ஷாட்க்கு ரெடி ஆகி உள்ளே வர அவரை பார்த்ததும் சௌந்தர்யாவுக்கு ஒரே குழப்பமாம்.

இதையும் படிங்க: விஜயோட இன்ஸ்பிரேஷன் யார் தெரியுமா? அதான் அந்த கெட்டப்பில் மாஸ் காட்டினாரா தளபதி?

ஏனெனில் பாலாஜி என்ற கதாபாத்திரம் அந்த படத்தில் ஒரு வெயிட்டான ரோல். ஆனால் வசந்த் வசியை பார்க்கும்போது மிகவும் சாதுவாக இருந்தாராம். அதனால் சௌந்தர்யா ரஜினிகாந்த் இவரை வேண்டாம் என கூறிவிட்டாராம். அதனால் அன்று எடுக்க வேண்டிய ஷாட் எடுக்க முடியாமல் போனதாம். அதன் பிறகு தான் இப்போது இருக்கும் பாலாஜி மோகன் அந்த கதாபாத்திரத்திற்கு நடிக்க வந்தாராம்.

vasanth

ஆனால் இதைப் பற்றி வசந்த் வசி ஒரு பேட்டியில் கூறும்போது ஒரு பெரிய படத்தில் நடிக்கப் போகிறோம். மேக்கப் எல்லாம் போட்டுவிட்டு ஸ்கிரிப்ட் கையில் இருக்க அவ்வளவுதான் இனி நம் வாழ்க்கை எங்கேயோ போகப் போகிறது என்ற கனவோடு சம்பந்தப்பட்ட காட்சியில் நடிக்க போக நீ வேண்டாம் என்று சொன்னால் நம் மனம் எந்த அளவு பாதிக்கப்படும்.

இதையும் படிங்க: இந்த போஸ் எப்படி இருக்கு? வெளியான ரஜினியின் நியூ லுக்.. பக்கத்துல யார் நிக்குறாங்கனு பாருங்க

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தான் நான் இருந்தேன். அன்று வீட்டுக்கு போய் அழாத நேரம் கிடையாது .அழுது தீர்த்துவிட்டேன். அந்த படத்தை தியேட்டரில் பார்க்கும்போது எனக்கு இருந்த மனக்குமுறல் எனக்கு மட்டுமே தெரியும் என ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் வசந்த் வசி.

Published by
Rohini

Recent Posts