இப்படி பண்ணுவாங்கனு எதிர்பார்க்கல.. கர்ப்பமான நேரத்திலும் கருணை காட்டாத சீரியல்!..
சீரியல் மக்கள் மத்தியில் சினிமாவை காட்டிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சினிமாவில் ரிட்டையர்டு ஆனவர்கள் எல்லாம் சீரியலை நோக்கி பயணித்து இன்னும் பிரபலமாகி வருகிறார்கள். அதுவும் சேனல்களுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகின்றது.
இந்த நிலையில் ஜீ தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிய சீரியல் ‘செம்பருத்தி’. 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபப்பான இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பேர் வாங்கியவர் நடிகை பரதா. மித்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இவருக்கு 2020ஆம் ஆண்டு திருமணமாகி அண்மையில் தான் வளைகாப்பு நிகழ்வு கூட நடந்தது. மேலும் சன் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலான ‘தாலாட்டு’ சீரியலிலும் நடித்து சமீபத்தில் தான் விலக்கப்பட்டார்.
அதுகுறித்து கேட்டபோது ஏற்கெனவே அவர் கர்ப்பமாகி கரு கலைந்திருந்ததாம். சமீபத்தில் மீண்டும் கர்ப்பமாக இருந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சீரியல் தான் அவருடைய உலகமாக இருந்திருக்கிறது. கர்ப்பமாக இருந்தால் சீரியலில் கொஞ்சம் உதவிக்கரமாக நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்திருக்கிறார்.
ஆனால் இவர் கர்ப்பமாக இருந்ததினால் அந்த சீரியலை விட்டு விலக்கி விட்டார்களாம்.மேலும் அவர் கர்ப்பமாக இருப்பதால் செக்கப் போன்ற காரணங்களுக்காக 10 நாள்கள் விடுப்பு வேண்டும் என்று கேட்டதற்கு 6 நாள்கள் வந்து நடித்துக் கொடுத்து விட்டு போங்கள் என்று சொல்ல அதையும் செய்திருக்கிறார்.
விடுப்பு முடிவதற்குள் தாலாட்டு சீரியலில் இருந்து பரதாவின் கதாபாத்திரத்தையே தூக்கிவிட்டார்களாம். இதை பற்றி கூறும் போது தாலாட்டு சீரியல் வாய்ப்பு கிடைக்கும் போது ‘மொட்டை ரோஜா’ என்ற சீரியலிலும் வாய்ப்பு வந்ததாம். ஆனால் தாலாட்டு சீரியலுக்காக மொட்டை ரோஜா சீரியலை விட்டுவிட்டாராம். இப்போது தாலாட்டு சீரியல் கைவிட்டாலும் மொட்டை ரோஜா சீரியல் உதவிக்கரம் நீட்டி அவரது மகப்பேறு காலத்திலும் அவரை நன்றாக பார்த்துக் கொள்கிறார்களாம்.