ஹாஸ்டல் பசங்க கூட அந்த மாதிரி உறவு- கணவர் குறித்து பகீர் கிளப்பிய பிரபல சீரியல் நடிகை!
கடந்த சில நாட்களாக உருகி உருகி காதலித்து போட்டோ ஷூட், ரீல்ஸ் என கிட்டத்தட்ட ரோமியோ ஜூலியட் ரேஞ்சுக்கு காதலர்களாக இருந்து பிரம்மாண்டமாக திருமணம் செய்துக்கொள்ளும் ஜோடிகள் வெகு குறைத்த நாட்களிலேயே விவாகரத்து செய்து பிரிந்து விடுகிறார். அப்படி பிரிந்தும் அவரவர் அமைதியாக போயிருந்தால் யாருக்கும் எந்த பிரச்னையும் வராது.
ஆனால் சந்தி சிரிக்கும் அளவுக்கு ஒருவரை மாற்றி ஒருவர் குறை கூறி போலீஸீல் புகார் கொடுப்பது, யூடியூப் சேனல்களுக்கு பேட்டிகொடுப்பது என அசிங்கப்படுத்திக்கொள்கிறார்கள். அப்படித்தான் செவ்வந்தி சீரியல் மூலம் பிரபலமானவர் திவ்யா ஸ்ரீதர். இவர் கேளடி கண்மணி சீரியலில் நடித்த நடிகர் அர்னவ்வை காதலித்து திருமணம் செய்யாமலே கர்ப்பம் ஆனார். அதன் பின்னர் இந்த விஷயம் அறிந்து இருவருமே அவசர அவசரமாக திருணம் செய்தனர்.
திருமணம் ஆன மூன்று மாதத்திலே அர்னவிற்கு வேறுஒரு பெண்ணுடன் தொடர்வு ஏற்பட திவ்யாவை ஏமாற்றி சென்றுவிட்டார். இதையடுத்து இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் தங்களது அந்தரங்க விஷயங்கள் முதல். செக்ஸ் சாட் , ஆடியோ வரைக்கும் மீடியாவில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள். திவ்யாவுக்கு குழந்தை பிறந்தும் அர்னவ் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்நிலையில் தற்போது திவ்யா பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு அதிர்ச்சி பேட்டி கொடுத்துள்ளார். அதாவது, என் கணவர் அர்னவ் ஹாஸ்டலில் படிக்கும்போதே அங்கிருந்த ஆண் நண்பர்களுடன் ஓரினசேர்கையில் ஈடுபட்டுள்ளார் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.