விசித்ரா கையால அவார்ட் வாங்குறப்போ வெட்கமா இருந்துச்சு… பிரபல சீரியல் நடிகை சொன்ன ஷாக் தகவல்…

Published on: November 30, 2023
vichithra
---Advertisement---

Actress Vichithra: தமிழ் சினிமாவில் கிளாமர் நடிகையாக வலம் வந்தவர் நடிகை விசித்ரா. முன்னணி நடிகர்கள் பலரின் திரைப்படங்களில் தனது கவர்ச்சியான நடிப்பினை வெளிக்காட்டியவர். இவர் பொற்கொடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அனால் அப்படம் இவருக்கு ரிலீஸ் ஆகாமல் பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தது. மேலும் அமராவதி, அமைதிபடை, தொட்டால் சிணுங்கி போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். விசித்ரா அந்த காலத்தில் இளசு முதல் பெருசு வரை அனைவராலும் ரசிக்கப்பட்ட ஒரு நடிகையும் கூட.

இதையும் வாசிங்க:உங்களுக்காக நடிப்பதையே நிறுத்திடுறேன்!. மைக் மோகனை உருகி காதலித்த நடிகை.. அட நிஜமாதாங்க!..

இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸில் கலந்து கொண்டுள்ளார். பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முதல் வாரமே இவருக்கும் வனிதாவின் மகளான ஜோவிகாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கல்வியின் முக்கியத்துவத்தை கூறிய விசித்ராவிற்கு கடைசியில் நியாயமே கிடைக்கவில்லை.

தற்போது பிரபல சீரியல் நடிகையான பிரேமி வெங்கட் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஒரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். பிரேமி வெங்கட் கண்மணி, நாச்சியார் புரம் போன்ற சீரியல்களின் மூலம் பிரபலமானவர். இவர் ஒரு முறை சன் டிவியில் ஒளிபரப்பாகிய கண்மணி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த வில்லிக்கான விருது வழங்கப்பட்டது.

இதையும் வாசிங்க:கேமராவில் மாயாஜாலங்கள் காட்டிய ஒளிப்பதிவாளர் கர்ணன்!.. நிறைவேறாமலே போன கடைசி ஆசை..

அப்போது அந்த விருதினை விசித்ரா கையால் வாங்கினாராம். அப்போது இவருக்கு நெருடலாக இருந்ததாம். ஒரு கிளாமர் நடிகை கையால் விருதினை வாங்குவதற்கு அவருக்கு இஷ்டமே இல்லையாம். இஷ்டம் இல்லாமல்தான் அவர் விசித்ரா கையால் விருதினை வாங்கினாராம்.

premi

ஆனால் சமீபத்தில் பிக்பாஸ்  நிகழ்ச்சியின் மூலம் விசித்ரா மீது இருந்த இமேஜே மாறிவிட்டதாம். விசித்திராவின் பக்குவம், அவரின் படிப்பு, பேச்சு, அவர் நடந்துகொள்ளும் முறை எல்லாவற்றையும் பார்த்த பின் விசித்ரா மீதுள்ள இமேஜே மாறிவிட்டது. அவர் மாற்றிவிட்டார் என பிரேமி வெங்கட் கூறியுள்ளார்.

இதையும் வாசிங்க:இது என்னோட படமே இல்ல!… சூப்பர் ஹிட் படத்தை பற்றி எம்.ஜி.ஆர் சொன்னது இதுதான்!..

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.