Categories: latest news

யாரு மேல இந்த அளவு கோபம்? பொங்கி எழுந்த சுந்தரி.. வைரலாகும் வீடியோ

Actress Gabriella:  வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு வந்தவர்களுக்கு தான் அதன் அருமை என்ன என்பது புரியும். எப்படியாவது ஒரு உயர்ந்த இடத்தை அடைய மாட்டோமா என்ற நம்பிக்கையில் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருப்பார்கள். தான் நினைத்த இடத்தை அடைந்ததும் தான் பட்ட கஷ்டத்தை தனக்கு பின்னால் வருபவர்கள் படக்கூடாது என்பதிலும் உறுதியாக இருப்பார்கள் ஒரு சில பேர்.

அந்த வகையில் பிரபல சீரியல் நடிகை கேப்ரில்லா இப்போது ஒரு நல்ல அந்தஸ்தில் இருக்கிறார் என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தி. ஆரம்பத்தில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு சாம்பியன் என்ற நிகழ்ச்சியில் ஒரு காமெடி நடிகையாக போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார் கேப்ரில்லா. ஆனால் அவருடைய காமெடி ரசிகர்களை ரசிக்கும் படியாக அமையவில்லை.

இதையும் படிங்க: ஓவர் சத்தமா இருக்கே… எல்லா பிரச்னையும் எதுக்கு முத்து, மீனாக்கே வருது… கதைய மாத்துங்கப்பா!..

இருந்தாலும் தொடர்ந்து ஒரு சில வாரங்கள் தாக்குப் பிடித்த கேப்ரில்லா ஒரு கட்டத்திற்கு பிறகு எலிமினேஷன் என்ற வலையில் சிக்கிக் கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு திடீரென சன் டிவியில் சுந்தரி என்ற சீரியலில் லீடு ரோலில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார் கேபிரில்லா. அதில் சுந்தரி என்ற கதாபாத்திரத்தில் ஒரு ஏழை பெண்ணாக ஆரம்பத்தில் அவருடைய கதாபாத்திரம் நகர இப்போது ஒரு கலெக்டராக மாறி மாஸ் காட்டி வருகிறார்.

எப்படி சீரியலில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுவது மாதிரியான காட்சிகளில் நடிக்கிறாரோ நிஜ வாழ்க்கையிலும் அவருடைய வாழ்க்கையில் இப்போது ஏற்றமாகத்தான் இருக்கிறது. சொந்தமாக நடிப்பு பள்ளி ஒன்றை ஆரம்பித்து அதன் கீழ் 20க்கும் மேற்பட்டோருக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கும் ஒரு ஆசிரியை ஆகவும் இன்று முன்னேறி இருக்கிறார் கேப்ரில்லா.

இதையும் படிங்க: தல டக்கர்டோய்!.. இது விடாமுயற்சி கெட்டப்பா? இல்லை குட் பேட் அக்லியா?.. அஜித் இவ்ளோ அழகா இருக்காரே!..

அது மட்டுமல்லாமல் அவருடைய தோற்றத்திலும் ஒரு மாற்றம் தெரிகிறது. மிகவும் ஸ்டைலிஷ் ஆக மாடர்ன் உடையை அணிந்து மாடர்ன் பெண்ணாக வலம் வந்து கொண்டிருக்கிறார் கேபிரில்லா. ஆனால் அவருடைய தோற்றத்திற்கு பின்னனியில் எந்த அளவுக்கு அவர் போராட்டங்களை சந்தித்து இருப்பார் என்பதையும் நம்மால் உணர முடிகிறது. அவ்வப்போது தொடர்ந்து மற்றவர்களுக்கு மோட்டிவேஷனல் அடிப்படையில் சில விஷயங்களை சொல்லி வரும் கேப்ரில்லா திடீரென ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

அதன் கீழ் ஒரு சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அனைத்து வன்மங்களையும் அனைத்து பேச்சுக்களையும் அனைத்து மயிரையும் தாங்கும் பக்குவம் நமக்கு வரும்போது வாழ்க்கையின் அருமை தெரியும் போதே புரியும் என்று குறிப்பிட்டிருக்கிறார். இது யாரை வைத்து அவர் பதிவிட்டிருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் ஏதோ சில கசப்பான அனுபவம் அவரை சந்தித்து இருக்கிறது. அதற்கு பதில் அளிக்கும் விதமாகத்தான் இந்த பதிவை வெளியிட்டு இருக்கிறார் என்பது மட்டும் நமக்கு நன்கு தெரிகிறது.

இதையும் படிங்க: தனுஷால் தெறித்து ஓடும் தங்கலான்!.. சோலோவா ரிலீஸ் பண்ண நினைச்சா அடுத்த ஆண்டு தான் வரும் போல?..

இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/C7fzrzUxX4a/?igsh=NzA0OTBrdTJvdHBw

Rohini

Recent Posts

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

2 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

5 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

17 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

18 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

18 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

20 hours ago