‘சுந்தரி’ சீரியலுக்கு பிறகு கேபி எடுத்த அதிரடியான முடிவு! வாயடைத்துப் போன ரசிகர்கள்

Published on: May 2, 2024
gabe
---Advertisement---

Gabriella: சன் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்ற தொடர் சுந்தரி. இந்த தொடரில் கேபி ஒரு லீட் ரோலில் நடித்துக் கொண்டு வருகிறார். இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு சாம்பியன் என்ற நிகழ்ச்சியில் சக போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கேபியின் காமெடி சரியாக எடுபடவில்லை என்ற காரணத்தினால் அந்தப் போட்டியிலிருந்து விலகினார்.

அதன் பிறகு தொடர்ந்து தனது வாய்ப்புகளுக்காக கோடம்பாக்கத்தை சுற்றிக் கொண்டிருந்தார். அதன் பிறகு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு தான் இந்த சுந்தரி சீரியல். இந்த சீரியல் ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. கருப்பு நிறமாக இருந்தாலும் இவருடைய நடிப்புக்கு என ஒரு தனி அழகே இருக்கின்றது. இவருடைய நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் தங்கள் ஆதரவை கொடுத்துக் கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வெயிலாவது மழையாவது.. காலுல விழுற சீனில் கொளுத்துற வெயிலில் தனுஷ் செஞ்ச விஷயம்

தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும் இன்றுவரை கேபி மக்கள் மனதில் ஒரு நீங்கா இடம் பிடித்து வருகின்றார். அந்த சீரியலில் ஆரம்பத்தில் ஒரு படிக்காத பெண்ணாக இருந்த கேபி தனது சொந்த உழைப்பாலும் முயற்சியாலும் படித்து கலெக்டர் ஆகி இருக்கிறார். அதேபோல தனது சொந்த வாழ்க்கையிலும் ஒரு பெரிய சாதனையை செய்திருக்கிறார். தனக்கு சொந்தமாக நடிப்பு பள்ளி ஒன்றை ஆரம்பித்து இருக்கிறார்.

அதற்கு  ‘கேபி சினிமா ஃபேக்டரி தியேட்டர்’ என பெயர் வைத்திருக்கிறார். அதன் மூலம் ஒரு 20 பேருக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கும் ஒரு ஆசிரியராக உயர்ந்திருக்கிறார் கேபி. நேற்று மே 1 உழைப்பாளர் தினத்தை ஒட்டி தனது சொந்த நடிப்பு பள்ளியை ஆரம்பித்து அதை இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: மே மாசம் யார் யார் படங்கள் ரிலீஸ் ஆக போகுதுனு தெரியுமா? அடிக்கிற வெயிலுக்கு இது பரவாயில்லை

இதோ அந்த லிங்க்: https://www.instagram.com/reel/C6ddX0XReXe/?igsh=cjZwdmUybHpkejZp

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.