Gossip: பெரிய பாஸில் காதல்… நம்பர் நடிகை ரூட்டில் திருமணம்… படு வெவரம் தான் பாஸ்!

gossip
Gossip: தமிழ் சினிமா நடிகைகள் பொதுவாக தங்களுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது திருமணத்தை செய்து கொள்ளவே மாட்டார்கள். ஏனெனில் அப்படி அவர்கள் திருமணம் செய்து கொண்டால் அதன் பிறகு அவர்களால் சினிமாவில் விட்ட இடத்தை பிடிக்கவே முடியாது.
இது பல நடிகைகளின் திருமணத்தில் உறுதியாகி இருக்கிறது. சமீபத்தில் கூட தமிழில் மிகப்பெரிய உச்சத்தில் இருந்த நம்பர் நடிகை தனக்கு இரண்டாவது இன்னிங்ஸ் கொடுத்த இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதுவரை உச்சத்தில் இருந்தார் நம்பர் நடிகை.
ஆனால் திருமணம் செய்து கொண்ட பின்னர் அது தொடர்ந்து சரிவை மட்டுமே சந்தித்தது. ஆறு மாதத்தில் புது ரூட்டில் குழந்தைகள் பிறந்திருப்பதாக வேறு அறிவிக்க அது சர்ச்சையின் உச்சமாக மாறியது. இதனால் தற்போது அம்மணியால் கால் வைக்க முடியாத நிலையாக மாறி இருக்கிறது.
இருந்தும் இதற்காக தன்னுடைய திருமணத்தில் மிகப்பெரிய ஒரு தொகையை பார்க்க அம்மணி முடிவெடுத்தார். ஆனாலும் இவர் திருமணம் முடிந்த பல ஆண்டுகள் கழித்து தான் அந்த டாக்குமென்டரி மிகப்பெரிய ஓடிடி ஒன்றில் வெளியானது.
ஆனால் அதற்கு பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யப்பட்டாலும் பலரும் கண்டுகொள்ளாமல் இருந்தனர். கடைசி நேரத்தில் சுள்ளான் நடிகருக்கு ஒரே கடிதத்தை போட்டு தன்னுடைய திருமண வீடியோவிற்கு புகழ் தேடிக்கொண்டார். இதை தொடர்ந்து இவர்களின் பிரச்சனையை வேறு தற்போது கோர்ட்டில் இருக்கிறது.
தற்போது இவர் போலவே பெரிய பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆறு பெயர் கொண்ட நடிகை அதை சீசனில் தன்னுடன் கலந்து கொண்ட நடன இயக்குனரை காதலித்து வந்தார். நடன இயக்குனருக்கு ஆதரவு கொடுத்த குடும்பத்தை வேறு பிரித்துவிட்டதாக சேதி.
இந்நிலையில் இந்த ஜோடி வரும் வாரத்தில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக 2 மாதத்திற்கு முன்னரே அறிவித்து விட்டனர். இதற்கிடையில் தங்களுடைய திருமணத்தை பெரிய மீடியா நிறுவனத்துக்கு நல்ல தொகையில் விற்கப்பட்டு இருப்பதாக கிசுகிசுக்கள் தகவல்கள் பரவி இருக்கிறது.