
latest news
அட்ஜெஸ்ட்மெண்ட் இல்லனா இத பண்ணுவாங்க.. புடவையை கழட்டிட்டேன்.. சீக்ரெட்டை பகிர்ந்த சீரியல் நடிகை..
பெண்களின் பாதுகாப்பு என்பது அனைத்து துறைகளிலும் பெரும் சவாலாகவே இன்றளவும் இருந்து வருகிறது. ஒரு பெண் பாதுகாப்பாக வீட்டிற்கு வருவதற்குள் அவள் தொடர்புடைய உறவுகள் மடியில் நெருப்பை கட்டிக்கொண்டு தான் உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டியிருக்கின்றது.
அந்த அளவுக்கு பெண்களை விளையாட்டு பொருளாக நினைக்கும் உலகமாக மாறிவருகிறது. இதில் சினிமா ஒன்றும் விதிவிலக்கா என்ன? அதுவும் சமீபகாலமாக சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற வார்த்தை பரவிக் கொண்டு வருகிறது. இதை பற்றி ஒரு சில நடிகைகள் நடிகர்கள் வெளிப்படையாகவே கூறியிருக்கின்றனர்.

shilpa1
இந்த நிலையில் பிரபல சீரியல் நடிகையான ஷில்பா அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். சன் டிவியில் ஒரு காலத்தில் அனைத்து மக்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த சீரியலான ‘சித்தி’ தொடரில் நடித்து புகழ் பெற்றவர் தான் ஷில்பா. வில்லி கேரக்டரில் இவரை அடிச்சுக்க வேறு ஆளே இல்லை. அந்த அளவுக்கு கெத்தாக திமிராக நடிக்க கூடிய நல்ல நடிகை.
இவரிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி கேட்டதற்கு யார் வந்து கேட்டாலும் ஒன்று yes அல்லது no. இந்த இரண்டு சாய்ஸ்கள் தான். அதை விட்டுவிட்டு ஒட்டுமொத்த சீரியலையும் சினிமாவையும் பழி சொல்லக் கூடாது என்று கூறினார். மேலும் அவரவர் விருப்பம் சார்ந்த விஷயம் என்றும் ஒரு வேளை பிடிக்க வில்லை என்றால் இந்த துறையில் இருந்து வேறு துறைக்கு போகலாம் என்றும் கூறினார்.

shilpa2
ஆனால் அதை எல்லாம் செய்யாமல் சினிமாவை நம்பி வருபவர்களையும் சில பேர் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றார். மேலும் அவரிடமும் சில பேர் வந்து கேட்டார்களாம்.அவர் முடியாது என்று சொல்ல காட்சிகளில் அந்த கோபத்தை காட்டுவார்களாம். ஒரு வேளை அடிக்கிற மாதிரி சீன் இருந்தால் உண்மையாக அடிக்க வைப்பார்களாம், திட்டுகிற மாதிரி இருந்தால் மிகவும் லோக்கலா திட்ட வைப்பார்களாம்.
ஆனால் இதற்கு மத்தியில் ஒரு காட்சியில் சேலையில் தீப்பிடிக்கிற மாதிரி சீனில் நடிக்க வேண்டுமாம்.அப்பொழுது இயக்குனர் சேலையில் பின் மாட்ட வேண்டாம் என்று ஒரு பாதுகாப்பிற்கு சொல்லியிருக்கிறார். சேலையில் தீப்பிடிக்கும் போது அருகில் இருக்கும் மற்றொரு நடிகை காப்பாற்ற வேண்டுமாம். ஆனால் அவர் பயந்து ஓடி விட்டாராம். அதற்குள் சேலையில் வேகமாக பிடித்து விட்டதாம். உடனே சேலையை முழுவதுமாக கழட்டி விட்டாராம். அந்த இயக்குனர் தான் ஓடி வந்து காப்பாற்றினாராம். இதை குறிப்பிட்டு சொன்ன ஷில்பா இந்த மாதிரியான ஆள்களும் சினிமா துறையில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று கூறினார்.