ஒயின் ஷாப்பிற்கே சென்று சரக்கு வாங்கிய சீரியல் நடிகை.... இதனால தான் அஜித் ஃபேன்ஸ் வச்சு செஞ்சாங்க போல....!
கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக் என்றால் அது சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி தான். அதற்கு காரணம் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி தான். ஏனெனில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வலிமை படம் பார்த்த ஸ்ரீநிதி படத்தை மொக்கை என கூறி விமர்சனம் செய்திருந்தார்.
இதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள் இவரை கண்டமேனிக்கு கழுவி ஊற்றியதோடு பலர் தகாத வார்த்தைகளாலும் திட்டி தீர்த்துள்ளார். இதில் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஸ்ரீநிதி சமீபத்தில் தான் அதில் இருந்து மீண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் தான் சமீபத்தில் அவர் பங்கேற்ற பேட்டியில், "பேச்சிலர் படத்தில் நடித்த நடிகை திவ்யபாரதி மாதிரி உன்னையும் கர்ப்பமாக்கி நடு ரோட்டில் விடனும்" என்றெல்லாம் தனக்கு மிரட்டல்கள் வந்ததாக அந்த பேட்டியில் ஸ்ரீநிதி மிகவும் வேதனையுடன் கூறியிருந்தார்.
இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில், ஸ்ரீநிதி அடுத்ததாக ஒரு சிறப்பான சம்பவத்தை செய்துள்ளார். அதாவது நடிகை ஸ்ரீநிதி சமீபத்தில் அவரது நண்பர்களுக்காக சரக்கு வாங்க ஒயின் ஷாப்பிற்கே சென்று சரக்கு வாங்கியதோடு வீடியோவையும் எடுத்து வெளியிட்டுள்ளார்.
இதுதான் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இந்த வீடியோவை கண்ட பலரும் இதனால் தான் உன்னை அஜித் ரசிகர்கள் வச்சு செய்தனர் என அவரை விமர்சனம் செய்து வருகிறார்கள்.