சிம்புவை நம்பி தான் வீட்டுக்கு போனேன்.! ஆனால், என்னை ஏமாத்திட்டார்.! - சீரியல் நடிகை பகீர்.!
தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள், ஒரு சில பிரபல சீரியல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சீரியல் நடிகை ஸ்ரீநிதி. சீரியலில் எவ்வளவு பிரபலமானாரோ அதைவிட அதிகமாகவே தனது இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் பிரபலமாகி விட்டார்.
முதலில் வலிமை திரைப்படத்திற்கு நெகட்டிவான விமர்சனங்கள் கூறி இணையவாசிகள் மத்தியில் கடுமையாக கலாய்களால் பாதிக்கப்பட்டவர் ஸ்ரீநிதி. அதன் பிறகு, தான் சிம்புவை காதலிப்பதாக கூறி சிம்பு வீட்டிற்கே சென்று விட்டார்.
சிம்பு நீயும் சிங்கிள், நானும் லவ் பெயிலியர் சிங்கிள் அதனால் நீ என்னுடன் சேர்ந்து வந்துவிடு. என்றெல்லாமம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இணையவாசிகளை பீதியடைய வைத்துவிட்டார்.
இவர் அண்மையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அசராமல் பதில் அளித்தார். அந்த சமயம் சிம்பு வீட்டிற்கு சென்றது குறித்து கேட்கப்பட்டது.
இதையும் படியுங்களேன் - அதுக்கு 10 ஆயிரம்...இதுக்கு 500 மட்டும் போதும்....ஆப் மூலம் சேட்டை செய்யும் கிரண்.!
அதற்கு பதிலளித்த ஸ்ரீநிதி, ' சிம்பு என்னை போலவே நடந்து கொண்டார். அவருடைய கேரக்டர் என் கேரக்டருக்கு ஒத்து போனது. அதன் காரணமாக சிம்பு என்னை ஃபாலோ செய்கிறார் என்று நினைத்துவிட்டேன். அதன் காரணமாகத்தான் நான் சிம்பு வீட்டிற்கு சென்றேன். ஆனால் என்னை யாரும் உள்ளே அனுமதிக்கவில்லை. அதனால் வாசலில் நின்று போராடினேன். என்னை அவர்கள் ஏமாற்றிவிட்டார்கள். கொஞ்சம் தண்ணீர் கூட அவர்கள் கொடுக்கவில்லை. ' என்று மிகுந்த மனவருத்தத்துடன் ஸ்ரீநிதி அந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
இதனை பார்த்த ரசிகர்கள் உண்மையில் ஸ்ரீநிதி நலமா நலமாக தான் இருக்கிறாரா? அல்லது அவரது இயல்பே அப்படித்தானா என்று குழம்பிப்போய் உள்ளனர். தனது மனதில் பட்டதை அப்படியே வெளியில் பேசிவிட்டார்.