latest news
மரணத்தை முன் கூட்டியே கணித்த சுருதியின் கணவர்! உருக வைத்த அந்த பதிவு
சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை சுருதி சண்முகப்பிரியா. இவர் சன் டிவியில் ஒளிப்பரப்பான நாதஸ்வரம், வாணி ராணி போன்ற புகழ் பெற்ற நாடகங்களில் நடித்து மக்களின் நெஞ்சங்களை வென்றவர்.
அதுமட்டுமில்லாமல் பாரதிகண்ணம்மா சீரியலிலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அழகான தோற்றம், நல்ல நிறம் என பார்த்ததும் பிடிக்கும் விதமான முகம் கொண்டவர் சுருதி சண்முகப்பிரியா. இவர் கடந்தாண்டு அரவிந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அவருடைய கணவரான அரவிந்த் உடற்பயிற்சி நிலையம் நடத்திக் கொண்டிருந்தாராம். அதுமட்டுமில்லாமல் மிஸ்டர் தமிழ்நாடு என்ற பரிசையும் கடந்தாண்டு தான் வாங்கினாராம் அரவிந்த். இந்த நிலையில் நேற்று சுருதியின் கணவர் அரவிந்த் திடீர் மாரடைப்பால் காலமானார்.
இதையும் படிங்க : அவன மாதிரி என்னால நடிக்க முடியாது!… மணிரத்னம் படம் பார்த்து ஒப்பனா சொன்ன நடிகர் திலகம்!…
இந்த செய்தி ஒட்டுமொத்த சின்னத்திரைக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இருவருமே மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனுமே நாள்களை கழித்திருக்கின்றனர். திருமணமான புதிதில் இருவரும் சேர்ந்து பாரீஸ் சென்றிருக்கின்றனர்.
ஏராளமான ரீல்ஸ் வீடியோக்களை போட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தி வந்தனர். இருவருமே சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவும் இருந்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில் இரண்டு வாரத்துக்கு முன்புதான் அரவிந்த் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ‘ நிறைவேறாத கனவுகளுடன் இறப்பதை விட நல்ல நினைவுகளுடன் இறப்பதே மேல்’ என்ற கேப்சனை பதிவிட்டிருக்கிறார்.
இதை பார்த்த ரசிகர்கள் இப்போது மிகவும் துக்கத்தில் இருக்கிறார்கள். மேலும் சுருதிக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் ஆதரவாக இருந்து வருகிறார்கள்.
இதையும் படிங்க : என்னங்கடா மறந்துட்டீங்களா? நான் இருக்கேன் – திடீரென வெடிக்கும் அஜித் விஜய் உச்சக்கட்ட மோதல்