உதவி செஞ்சது தப்பா?.. என்கிட்டயே வேலையே காட்டிட்டாங்க!.. புலம்பும் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை.
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இரண்டு சீசன்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் வரும் வாரங்களில் மிக முக்கியமான திருப்பு முனைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
நான்கு வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் அருண் பிரசாத் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் .முதல் சீசனில் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் லீடு ரோலில் நடித்தார். அதன் பிறகு ரோஷினிக்கு வெள்ளி திரையில் வாய்ப்புகள் வரவே அந்த சீரியலை விட்டு அவர் விலகினார்.
ஆனால் பாரதிகண்ணம்மா சீரியல் ரோஷினி ஹரி பிரியனுக்கு ஒரு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது .அந்த சீரியல் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டார். அவரைத் தொடர்ந்து அவரது கதாபாத்திரத்தில் நடிக்க வந்தவர் நடிகை வினுஷா தேவி.
வினுஷா தேவிக்கும் இந்த சீரியல் மூலம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் வினுஷா தேவி தன்னுடைய அனுபவத்தையும் சீரியல் மூலம் தனக்கு கிடைத்த பெருமையையும் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் .மேலும் தன்னுடைய பலம் என்ன பலவீனம் என்ன என்பதையும் கூறி இருக்கிறார்.
அதாவது வினுஷா தேவி அனைவரையும் நம்பி விடுவாராம் .மேலும் உதவி என கேட்டு வருபவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை முகம் பாராமல் செய்யக்கூடியவராம். அதனால், தான் பட்ட ஒரு ஏமாற்றத்தை இந்த பேட்டியின் மூலம் கூறியிருக்கிறார் .
அதாவது அவர் ஷூட்டிங்கில் இருக்கும்போது ஒரு ஆசிரமத்தில் இருந்து இரு பெண்கள் அவரிடம் உதவி என கேட்டு வந்திருக்கின்றனர் .அவரும் பணம் கொடுத்து மேலே சில ஆட்கள் இருக்கிறார்கள், அவர்களிடமும் போய் கேளுங்கள் என்று சொல்லியிருக்கிறார் .
மேலே போய்விட்டு திரும்பி அவர்கள் ஆசிரமத்திற்கு சென்று விட்டார்களாம் .அதன் பிறகு வினுஷா தேவி அவருடைய அறைக்கு போன சமயம் அவருடைய வளையல்கள் 2 காணவில்லையாம்.ஆனால் அதை அந்த பெண்கள் தான் எடுத்தார்கள் என அவர் சொல்லவில்லை என்றாலும் இப்படி பல சமயங்களில் தான் ஏமாற்றப்பட்டதாக வினுஷா கூறினார்.