அஜித் பிறந்த நாளுக்கு அடித்தது luck..! மகிழ்ச்சியில் சின்னத்திரை பிரபலம்...! போட்டோ வெளியிட்டு சஸ்பென்சை உடைத்தார்.
சின்னத்திரையில் அழகு பதுமையாக வலம் வருபவர் சின்னத்திரை நடிகை ரித்திகா. இவர் ராஜா ராணி - 1, பாக்கியலட்சுமி சீரியல்களில் நடித்துள்ளார். பார்க்க பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்தில் எல்லாரையும் கவரும் விதமாக இருப்பார்.
இப்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் எல்லா ரியாலிட்டி ஷோக்களிலும் இவரை பார்க்க முடியும்.இவர் இல்லாத ஷோவே இல்லை. அந்த அளவுக்கு மிகவும் பிரபலமானவர்.
எல்லாருடைய அன்பையும் எளிதில் பெற்றவர். அழகாக பழகக் கூடியவர். இவருக்கென்று ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
சமூக வலைதளங்களிலும் பிஸியாக தன்னை வைத்துக் கொள்கிறார். இந்த நிலையில் அஜித் பிறந்த நாளான இன்று விஜய்டிவியில் அவரை பெருமைப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் நடைபெற்றது.அப்போது ரித்திகா அஜித் கட் அவுட்கள் பக்கத்தில் நின்று உண்மையிலயே அவர் பக்கத்தில் இருக்கும்ஃபீலிங்கில் நின்று போட்டோ எடுத்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.