என்னது அடுத்த காதல் ஜோடியா? டாக்டர் பாரதியை தொடர்ந்து காதலில் விழுந்த மற்றொரு நாயகன்....!

by ராம் சுதன் |
vj vishal
X

இந்த ஆண்டு சின்னத்திரை ஆண்டு என்பது போல அடுத்தடுத்து சின்னத்திரை நட்சத்திரங்கள் வரிசை கட்டி திருமணம் செய்து வருகின்றனர். தற்போது மேலும் சில சின்னத்திரை நட்சத்திரங்கள் காதலிப்பதாக தொடர்ந்து கிசுகிசுக்கள் எழுந்து வருகிறது.

முன்னதாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருண் பிரசாத்தும், ராஜா ராணி தொடரில் வில்லியாக நடித்து வரும் நடிகை அர்ச்சனாவும் காதலிப்பதாக செய்திகள் வெளியானது.

bakiyalakshmi

தற்போது அந்த வரிசையில் மேலும் ஒரு இளம் நடிகர் இணைந்துள்ளது. அவர் வேறு யாருமல்ல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் எழில் என்ற கேரக்டரில் நடித்து வரும் நடிகர் விஷால் தான். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நடிகர் விஷாலுக்கு இந்தாண்டு விஜய் அவார்ட்ஸ் விழாவில் சிறந்த சப்போர்ட்டிங் ஆக்டர் விருது வழங்கப்பட்டது.

விருதை பெற்ற மகிழ்ச்சியில் நடிகர் விஷால் மேடையில் பேசிய போது கேமராமேன் விஷால் மற்றும் ராஜா ராணி சீரியலில் புதிய சந்தியாவாக தற்போது நடித்து வரும் நாயகி ரியாவை மட்டும் போகஸ் செய்து வளைத்து வளைத்து வீடியோ எடுத்திருந்தார்.

உடனே இதை பார்த்த நெட்டிசன்கள் என்னடா நடக்குது இங்க? அடுத்த காதல் ஜோடியா? என்பதுபோல பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். ஆனால் சிலரோ ஏன் இப்படி கொளுத்தி போடுறீங்க? என கூறி வருகிறார்கள்.

ஏற்கனவே அருண் மற்றும் அர்ச்சனா ஆகிய இருவரும் காதலிக்கிறார்களா என்பதே தெரியவில்லை. அதற்குள் விஷாலையும் இந்த கிசுகிசுவில் இழுத்து போட்டு விட்டார்களே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்

Next Story