Serial TRP: சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் புகழை வார இறுதியில் வெளியாகும் டிஆர்பியே நிர்ணயிக்கும். அந்த வகையில் இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது.
டிஆர்பி முதல் ஐந்து இடம்
சின்னத்திரை டிஆர்பிக்கான இந்த வார பட்டியலில் தொடர்ந்து வியத்தகு மாற்றம் நடந்துள்ளது. அதன்படி சன் டிவியின் முன்னணி சீரியல்களே முதல் ஐந்து இடத்தினை இந்த முறையும் தக்க வைத்துள்ளது.
தொடர்ந்து முதலிடத்தினை தக்க வைத்து வந்த சீரியலை பின்னுக்கு தள்ளி இந்த முறை மூன்று முடிச்சு 10.45 புள்ளிகளை பெற்று முதலிடத்தினை பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் அன்பு மற்றும் ஆனந்தி காதலுக்காக புகழ் பெற்ற சிங்கப் பெண்ணே 10.41 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
இதையும் படிங்க: குப்பை படத்தை வெற்றின்னு சொல்வாங்க…. காலா படம் எந்த விதத்தில் தோல்வி? சீறிய இயக்குனர்
மூன்றாம் இடத்தில் 10.23 புள்ளிகளை பெற்று கயல் சீரியல் இடம் பெற்றுள்ளது. இந்த சீரியல் கடந்த சில வாரங்களாக முதலிடத்தில் இருந்து வந்தது. தற்போது தேவையில்லாத கதைகளத்தால் கீழிறங்கி இருக்கிறது.
நான்காம் இடத்தில் 9.89 புள்ளிகளை பெற்று சுந்தரி சீரியல் இடம் பெற்றுள்ளது. 1000 எபிசோட்களை கடந்து ஒளிபரப்பான இந்த சீரியல் கடந்த வாரத்துடன் முடிந்தது. கிளைமேக்ஸ் வாரம் என்பதால் இந்த சீரியலுக்கு நிறைய ரசிகர்களை கவர்ந்தது.

ஐந்தாவது இடத்தில் கேப்ரியெல்லா நடிப்பில் மருமகள் சீரியல் இடம்பெற்றுள்ளது. தனிக்குடித்தனம் குறித்த கதைக்களம் ஒளிபரப்பாகி வரும் நிலையில் 9.16 புள்ளிகளை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: மனோஜுக்கு பம்பர் லாட்டரியால இருக்கு… கதிர் பிரச்னையை தீர்த்த அண்ணன்கள்… மீண்டும் தொடங்கிய ஈஸ்வரி!..
ஆதிக்கத்தை உடைத்த விஜய் டிவி
ஆறாம் இடத்தில் 9.11 புள்ளிகள் பெற்று சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராமாயணம் இடம் பெற்றுள்ளது. ஏழாவது இடத்தில் விஜய் டிவி உள்ளே வந்து இருக்கிறது. சில வாரங்களாகவே இந்த இடத்தை தக்க வைத்துக்கொண்டு வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த முறை 8.05 புள்ளிகளைப் பெற்று இருக்கிறது. எட்டாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 இடம்பெற்றுள்ளது.
சரியான கதைக்களத்தை நோக்கி நகர்வதால் இந்த சீரியல் 7.09 புள்ளிகளை பெற்றுள்ளது. ஒன்பதாவது இடத்தில் 6.68 புள்ளிகளுடன் பாக்கியலட்சுமி, 6.67 புள்ளிகளுடன் ஆஹா கல்யாணம் பத்தாவது இடம் பிடித்துள்ளது. பல வாரங்களாக முதல் 10 இடத்தினை சன் டிவியே ஆக்கிரமித்து வந்தது. ஆனால் இந்த முறை இரண்டாம் வாரமாக விஜய் டிவியின் சீரியல்கள் அதிகமாக டாப் இடத்துக்குள் வந்துள்ளது.
