More
Categories: Cinema History Cinema News latest news

அந்த சண்டை காட்சியை 18 நாட்கள் எடுத்தோம்!. கேப்டன் விஜயகாந்தே சொன்ன ஆச்சர்ய தகவல்!..

Vijayakanth: கேப்டன் விஜயகாந்த் வாழ்க்கையில் மட்டுமல்ல நடிப்பிலும் செம கெட்டி. அவர் படங்களில் ஆக்‌ஷன் காட்சிகள் அவ்வளவு தத்ரூபமாக இருக்கும். அப்படி ஒரே ஒரு காட்சிக்காக 18 நாட்கள் ஷூட்டிங் நடந்த சுவாரஸ்ய சம்பவத்தினை நடிகர் விஜயகாந்தே சொல்லி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சேதுபதி ஐபிஎஸ் இப்படத்தினை பி.வாசு இயக்கி இருந்தார். ஏவிஎம் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தில் விஜயகாந்துடன், மீனா, எம்.என்.நம்பியார், ஸ்ரீவித்யா, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இசையில் பாடல்கள் எல்லாமே டாப் ஹிட் அடித்தது.

Advertising
Advertising

இதையும் படிங்க: அஜித் படத்துக்கே ஐடியா கொடுத்த நடிகர் சிவா.. இந்த பட டயலாக்கை நோட் பண்ணிங்களா?

பின்னர் ரிலீஸான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருந்தும் இப்படம் இப்போது இருக்கும் பலரிடத்திலும் லைக்ஸ் குவித்து இருக்கிறது. இப்படத்தின் ஒரு காட்சிக்காக படக்குழு 18 நாள் பட்ட கஷ்டம் குறித்து விஜயகாந்த் ஒரு வீடியோவில் பேசி இருக்கிறார்.

அந்த வீடியோவில் இருந்து, என்னுடைய ஆபிஷில் இருந்து தீவிரவாதிகள் என்னிடம் சண்டைக்கு வருவார்கள். அது ரோட்டில் நடக்கும். அதுக்கு தினம் 70 கார் தேவைப்பட்டது. அப்போது தான் அது ரியலான ரோட்டை தத்ரூபமாக காட்டும். இப்படி 70 காருடன் நாங்க ஷூட்டிங் போனால் அரை மணி நேரத்திலே மழை வந்துவிடும்.

இதையும் படிங்க: அஜித் படத்துக்கே ஐடியா கொடுத்த நடிகர் சிவா.. இந்த பட டயலாக்கை நோட் பண்ணிங்களா?

இதுவே வேறு தயாரிப்பு நிறுவனமாக இருந்து இருந்தால் 5 காரினை வைத்து முடிக்க சொல்லி இருப்பார்கள். ஆனால் ஏவிஎம் நம்பிக்கை கொடுத்தனர். 18 நாட்கள் அந்த காட்சிக்காக உழைத்தோம். முழு நாள் ஷூட்டிங் செய்யவில்லை. அதிகபட்சம் ஒருநாளைக்கு 30 நிமிஷம் மட்டுமே ஷூட்டிங் இருக்கும். இதுவரை என்னுடைய கேரியரிலேயே மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்த சண்டை காட்சி அதுதான். அந்த காட்சி இன்று வரை மக்கள் மனதில் பேசப்படும் சண்டை காட்சியாக அமைந்து இருக்கிறது. 

இந்த காட்சியை காண: https://twitter.com/arunaguhan_/status/1736638704880640314

Published by
Akhilan