கவர்ச்சி டூ ஹோம்லி... போட்டோவில் வித்தியாசம் காட்டும் ஐஸ்வர்யா மேனன்...

by adminram |
கவர்ச்சி டூ ஹோம்லி... போட்டோவில் வித்தியாசம் காட்டும் ஐஸ்வர்யா மேனன்...
X

ஐஸ்வர்யா மேனன், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழி படங்களில் பிரபலமானவர். திரைப்படங்களில் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிடும் புகைப் படங்கள் மூலமும் அதிகம் பிரபலமடைந்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மாஸ்...

2013 ஆம் ஆண்டு ஆப்பிள் பெண்ணே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு எண்டரி கொடுத்த கேரளத்து பைங்கிளி ஐஸ்வர்யா மேனன். அதே ஆண்டு தசவாலா என்ற கன்னட படத்தில் அறிமுகமாகி, கன்னட ரசிகர்களால் கவனிக்கப்பட்டு சில விருதுகளையும் பெற்றுள்ளார். தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து தென்னிந்தியத் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக மாறி வருகிறார். இந்த நிலையில், தமிழில் ”தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன்பின் 2018 ஆம் ஆண்டு தமிழ் வெளியான ”தமிழ் படம் 2” என்ற திரைப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாகவும், பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக “நான் சிரித்தால்” ஆகிய படங்களில் நடித்து ரசிகர் மனதினை கவர்ந்தார். நான் சிரித்தால் படத்திற்குப் பிறகு ஐஸ்வர்யா மேனன், இப்பொழுது தெலுங்கில் புதிய திரைப்படத்தில் பிரபல இளம் ஹீரோவுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தாலும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ஐஸ்வர்யா மேனன் வெளியிடும் புகைப்படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. எப்போதும் கிளாமருக்கு எந்தவித குறையில்லாமல் புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில், ஹோம்லி லுக்கில் அவர் கொடுத்துள்ள போஸ் வித்தியாசமாக இருக்கிறது என ரசிகர்கள் லைக்ஸ் அள்ளி குவித்து வருகிறார்கள்.

Next Story