சோறு, வீடு கொடுத்தது எல்லாம் தமிழ்.. பாசம் மட்டும் தெலுங்கா? சங்கீதாவை வெளுத்து வாங்கிய பிரபலம்
நடிகை சங்கீதாவை டான்ஸ் மாஸ்டர் கலா பேட்டி எடுக்கிறாங்க. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்த நாலு மொழிகளில் எந்தப் படங்கள்ல நடிக்கிறதுக்கு உங்களுக்குப் பிடிச்சிருக்குன்னு கேட்கிறார். அதுக்கு தெலுங்குன்னு சொல்றார். தமிழ்நாட்டுல வளசரவாக்கத்துல தான் அவங்க வீடு இருக்கு. ஆனா தெலுங்கு தான் பிடிக்கும்னு சொல்றாங்க.
அதுக்கு அவங்க சொல்ற காரணம் அங்கே மரியாதை நல்லா கொடுப்பாங்களாம். அப்படின்னா தமிழ்நாட்டுல மரியாதையே கொடுக்க மாட்டாங்களா? இவ்வளவு காலம் நடிச்சிட்டு வர்றீங்க. இவ்வளவு காலம் உங்களை மரியாதைக் குறைவாத் தான் நடத்தினாங்களா? என கேள்வி எழுப்பியுள்ளார் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு. வேறு என்னவெல்லாம் சொல்கிறார்னு பாருங்க...
பிதாமகன் படத்துக்குப் பிறகு தான் அவர் யாருன்னு தெரிஞ்சது. வெங்கட் பிரபுவுக்கு ஜோடியாக 'ரசிகா'ங்கற படத்துல தான் சங்கீதா முதல்ல நடிச்சாரு. படம் வந்துதா வரலயான்னு கூட தெரியல. அது தான் பல தோல்விப்படங்களைக் கொடுத்தது. அப்புறம் தான் சங்கீதாவா மாறினாங்க. அதன்பிறகு அவருக்கு திருப்புமுனை தந்தது பிதாமகன். காரணம் இயக்குனர் பாலா.
தமிழ்சினிமாவுல உட்கார்ந்துக்கிட்டு, தமிழ்சினிமாவுல நடிச்சிக்கிட்டு தமிழ்சினிமாவுல சாப்பிட்டுக்கிட்டு... உங்க பூர்வீகம் வேணா ஆந்திராவாக இருக்கலாம். சங்கீதா இப்படி பேசுனதுக்கு ஏதும் இனப்பற்று, மொழிப்பற்று உண்டான்னு தெரியல. இங்கு இருக்குறவங்க தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தமிழ் பற்றுள்ள சினிமா கலைஞர்கள் என்னங்க மரியாதை கொடுக்கலைன்னு கேட்க வேண்டியது தானே.
தமிழ்சினிமாவில் இருந்து கொண்டு சம்பாதித்து வீடு எல்லாம் கட்டிவிட்டு எனக்கு இது பிடிக்காதுங்க. தெலுங்கு தான் பிடிக்கும்னு சொல்றாங்க. இது எந்த விதத்துல நியாயம்? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பாலாவின் பிதாமகன் படத்தில் கஞ்சா விற்கிற கேரக்டரில் சங்கீதா நடித்து இருப்பார். படத்தில் கவர்ச்சி விருந்தையும் வாரி இறைத்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் வரவேற்புக்குள்ளானது.