இப்போ வரைக்கும் அஜித்தை இப்படித்தான் கூப்பிடுவாராம் ஷாலினி.. அதான் லவ்
Ajith Shalini: சினிமாவில் எத்தனையோ நட்சத்திர தம்பதிகளை பார்த்து வருகிறோம். ஆனால் சமீபகாலமாக கருத்து வேறுபாடு காரணமாக பல வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு நொடியில் ஒரு அறிக்கை மூலமாக முடித்து விடுகின்றனர். அதற்கு உதாரணமாக எத்தனையோ பேரை சொன்னாலும் சமீபத்தில் ஒரு அறிக்கை மூலமாக தனது திருமண வாழ்க்கையை முடித்திருக்கிறார் ஜெயம் ரவி.
ஜெயம் ரவியும் ஆர்த்தியும் காதலித்து திருமணம் செய்தவர்கள். இவர்களுக்கு ஒரு ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் எத்தனையோ க்யூட் கப்பிலை பார்த்திருப்போம். ஆனால் ஒரு க்யூட்டஸான தம்பதிகளாக ஜெயம் ரவியும் ஆர்த்தியும் திகழ்ந்து வந்தார்கள்.
இதையும் படிங்க: கதையை பிரசாந்த்தான் கேட்பார்… சூப்பர்ஹிட் படத்துக்கே நோ சொல்லிட்டார்.. இதையா மிஸ் பண்ணாரு?
எந்தவொரு மேடை ஏறினாலும் ஆர்த்தியை பற்றி பேசாமல் இறங்க மாட்டார் ஜெயம் ரவி. இருவருக்குள்ளும் அவ்வளவு ஒரு நெருக்கம் இருந்ததை பார்க்க முடிந்தது. அடிப்படையில் ஆர்த்தி ஒரு நடிகையாக இல்லாவிட்டாலும் நடிகைக்குரிய எல்லா தகுதிகளும் இருந்தன. அழகிலும் சரி ஸ்டைலிலும் சரி ஒரு ஹீரோயினையே மிஞ்சும் அளவுக்கு இருந்தார் ஆர்த்தி.
ஆனால் இருவருக்கும் இடையில் என்ன பிரச்சினை என்றே தெரியவில்லை. திடீரென இருவரும் பிரிந்து வாழ்வதாக அறிவித்திருக்கிறார்கள். இவர்களை போல தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஜிவி மற்றும் சைந்தவி இவர்களும் தங்களுடைய திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: ஐயோ அந்த நடிகையா? ‘அந்தகன்’ படத்தில் சிம்ரனுக்கு பதில் நடிக்க இருந்தவர்?
இவர்களை பொறுத்தவரைக்கும் தங்களுடைய சந்தோஷத்தை மட்டுமே பார்க்கிறார்களே தவிர அவர்களின் குழந்தைகளின் மனதை பற்றி நினைத்துக் கூட பார்ப்பதில்லை. இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான சபீதா ஜோசப் ஜெயம் ரவியின் இந்த முடிவு பொய்யாக இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவதாக கூறியிருக்கிறார்.
அதோடு ஒரு திருமண வாழ்க்கையில் கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்றால் ஒருவருக்கொருவர் பாராட்டி அவ்வப்போது ஏதாவது ஒரு கிஃப்ட் கொடுத்து தங்கள் அன்பை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று சபீதா கூறினார்.
இதையும் படிங்க: தனுஷுடன் இணைந்து நடிக்கும் அருண் விஜய்!.. என்னை அறிந்தால் போல பேர் வாங்கி தருமா?!…
உதாரணமாக காதலித்து திருமணம் செய்து கொண்ட அஜித் மற்றும் ஷாலினியை எடுத்துக் கொள்ளுங்கள். அஜித்தை ஷாலினி எப்போதும் பேபி என்றுதான் கூறுவார். அஜித் அவ்வப்போது லவ் யூ சொல்லிக் கொண்டே இருப்பார். இப்படி ஒருவரையொருவர் அன்பை பரிமாறி கொள்ள வேண்டும் என சபீதா கூறினார்.