அட்லி செய்த செயலால் செம காண்டான ஷாருக்கான்… இவருக்கு இதே வேலையா போச்சு!
தொடக்க காலத்தில் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அட்லி, “ராஜா ராணி” என்ற வெற்றித் திரைப்படத்தை இயக்கி, தமிழ் சினிமாவில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார். அதனை தொடர்ந்து விஜய்யுடன் இணைந்து “தெறி” படத்தை இயக்கிய அட்லி, அத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து “மெர்சல்”, “பிகில்” ஆகிய படங்களை இயக்கினார்.
இத்திரைப்படங்களின் தொடர் வெற்றியால் அவருக்கு பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து இயக்குவதற்கான வாய்ப்பு அமைந்தது. அத்திரைப்படத்திற்கான பணிகள் கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கியது. மேலும் கடந்த ஆண்டு அத்திரைப்படத்திற்கு “ஜவான்” என்று பெயர் வைக்கப்பட்டு ஒரு அட்டகாசமான டைட்டில் அறிவிப்பு வீடியோவும் வெளியிடப்பட்டது.
அதன் பிறகு அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், “ஜவான்” திரைப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி போன்ற தமிழ் நடிகர்கள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. மேலும் சான்யா மல்ஹோத்ரா, சுனில் குரோவர் ஆகியோரும் நடிக்க உள்ளதாக செய்திகள் தெரிவித்தன.
அதன்படி இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அட்லி செய்த ஒரு செயலால் ஷாருக்கான் கடுமையாக நடந்துகொண்டது குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ஷாருக்கான் நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளியான “பதான்” திரைப்படம் உலகளவில் 800 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து வருகிறது. இதனால் ஒரு பக்கம் ஷாருக்கானுக்கு மகிழ்ச்சி என்றாலும், மறு பக்கம் ‘ஜவான்” திரைப்படத்தை இயக்கி வரும் அட்லி, அதிகமான செலவுகளை இழுத்து வைக்கிறாராம். ஆதலால் கடும் கோபமான ஷாருக்கான், அட்லியை திட்டி தீர்த்துவிட்டாராம்.
ஷாருக்கான் இப்படி கடுமையாக நடந்துகொண்டதை தொடர்ந்து அட்லியும் டென்ஷன் ஆக, சென்னை திரும்பிவிட்டாராம் அட்லி. அதன் பின் 3 நாட்கள் கழித்துத்தான் மீண்டும் மும்பைக்குச் சென்றாராம்.
இதற்கு முன் “மெர்சல்”, “பிகில்” போன்ற திரைப்படங்களை இயக்கும்போதும் அட்லி, இவ்வாறு தயாரிப்பு செலவுகளை அதிகமாக இழுத்து வைத்தார் என்ற விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முத்தக்காட்சியா? வேண்டாம்… கடைசி நேரத்தில் கமல்ஹாசனை டென்ஷன் ஆக்கிய நடிகை…