கொஞ்சம் விட்ருந்தா ஷாருக்கானுக்கே ஆப்பு வச்சிருப்பார்!... அட்லி செய்த காரியத்தால் அலண்டுபோன பாலிவுட் பாட்ஷா…

Jawan
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு போன்ற பல தென்னிந்திய நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர்.
மேலும் இவர்களுடன் சான்யா மல்ஹோத்ரா, சுனில் குரோவர் ஆகிய பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் நடித்து வருகின்றனர். “ஜவான்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.

Jawan
இந்த நிலையில் “ஜவான்” திரைப்படம் குறித்து ஒரு சூடான தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது “ஜவான்” திரைப்படம் உருவாவதற்கு முன் இத்திரைப்படத்தின் கதையை ஷாருக்கானிடம் அட்லி கூறியபோது, துபாய் பகுதியை நெகட்டிவாக சித்தரிப்பது போன்ற சில காட்சிகள் இடம்பெற்றிருந்தனவாம்.
அப்போது ஷாருக்கான் “கதை மிகவும் பிரமாதமாக இருக்கிறது. ஆனால் சில காட்சிகள் துபாயை நெகட்டிவாக காட்டுவது போல் இருக்கிறது. எனக்கு துபாயில் பல தொழில்கள் இயங்கி வருகின்றன. இப்போது இந்த காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்றால் எனது தொழில்கள் பல பாதிக்கும். ஆதலால் இந்த காட்சிகளை மாற்றமுடியுமா?” என கேட்டிருக்கிறார். அதற்கு அட்லியும் “சரி” என்று பதிலளித்திருக்கிறார்.

Jawan
அதனை தொடர்ந்து ஷாருக்கான் “ஜவான் படத்தை தொடர்ந்து உங்களுக்கு ஆமீர் கான், சல்மான் கான், போன்றோரை இயக்குவதற்கு வாய்ப்புகள் வரும். ஆதலால் இதை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்” என்று கூறி சல்மான் கான், ஆமீர் கான் போன்றோருக்கு துபாயில் என்னென்ன தொழில்கள் இயங்கி வருகின்றன என்பது போன்ற தகவல்களையும் அட்லியுடன் அவர் பகிர்ந்துகொண்டாராம். இத்தகவலை வலைப்பேச்சு பிஸ்மி தனது வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இதையும் படிங்க: சிவாஜி கணேசனின் அசாத்தியமான சாதனையை முறியடித்துக் காட்டிய கமல்ஹாசன்… வேற லெவல்!