
நடிகர் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். ஜெயிலர் முதல் பாகம் வசூலை அள்ளிய நிலையில் இந்த படத்தின் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ஜெயிலர் முதல் பாகத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே இந்த படத்தையும் தயாரித்து வருகிறது..
ஒருபக்கம் ஜெயிலரில் நடித்ததை விட ஜெயிலர் 2-வி ஏராளமான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்க அவரின் அப்பாவாக பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி நடித்திருக்கிறார். மேலும், யோகி பாபு, சந்தானம், விஜய் சேதுபதி, மோகன் லால், சிவ்ராஜ்குமார் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
இந்நிலையில், இந்த படத்தில் ஷாருக்கான் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.. அவரிடம் ஏழு நாட்கள் கால்ஷீட் கேட்டிருக்கிறார்களாம். மார்ச் மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கவிருக்கிறது. அவர் காட்சிகளை எடுத்து விட்டால் அதோடு படம் முடிந்துவிடும் என்கிறார்கள்..

ஒரு காட்சியில் வரும் கேமியா வேடம் என்றால் ஒரே நாளில் எடுத்து விடலாம்.. ஆனால் ஷாருக்கானிடம் 7 நாட்கள் கால்ஷீட் கேட்டிருக்கிறார்கள் என்றால் அவருடன் நிறைய காட்சிகள் இருக்கும் எனத் தெரிகிறது. ரஜினியுடன் ஷாருக்கான் நடிக்கும் காட்சிகளை பார்க்க ரசிகர்களுக்கும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது…
இந்த படத்தை முடித்துவிட்டு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. அந்த படத்தை முடிந்தபின் மீண்டும் நெல்சன் இயக்கத்தில் கமலுடன் இணைந்து நடிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இன்று காலையில் கூட இந்த படம் தொடர்பான ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டார்கள். மேலும் இந்த படம் தொடர்பான புரரமோ வீடியோ நாளை மதியம் 12.07 மணிக்கு வெளியாகவுள்ளது.