Connect with us
banner

நயன்தாராவின் திடீர் ஹனிமூன் பிளானால் கதையே மாறிடுச்சாம்!.. தலையை பிய்த்துக் கொள்ளும் அட்லி!..

Cinema News

நயன்தாராவின் திடீர் ஹனிமூன் பிளானால் கதையே மாறிடுச்சாம்!.. தலையை பிய்த்துக் கொள்ளும் அட்லி!..

திருமணம் முடிந்த கையுடன் திருப்பதிக்கு போயிட்டு மும்பைக்கு கிளம்பி ஷூட்டிங் வந்து விடுவதாக வாக்கு கொடுத்திருந்தாராம் நடிகை நயன்தாரா.

ஆனால், ஏகே62 படம் ஆரம்பிக்க இன்னும் நிறைய நேரம் இருக்கு என்பதால், விக்னேஷ் சிவன் ஆசைப்படி திடீரென தாய்லாந்துக்கு ஹனிமூன் பறந்து விட்ட நயன்தாராவால் பாலிவுட்டில் விறுவிறுவென படப்பிடிப்பு நடத்தி வரும் அட்லிக்கு மிகப்பெரிய தலைவலி ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

ஷாருக்கானின் கால்ஷீட் வீணாக போகிறதே என டென்ஷனாக இருந்த அட்லியிடம் செம கூலாக நயன்தாராவுக்கு பதிலாக வேறு ஒரு ஹீரோயினை மாற்றிவிடலாம் என ஷாருக்கான் சொன்னதும் ஷாக்கி விட்டாராம் மனுஷன்.

ஹீரோயினையே மாற்ற சொல்லப்பா.. இந்த கேப்பை ஃபில் பண்ண தீபிகா படுகோனை கேமியோ அழைத்து படப்பிடிப்பு நடத்தலாம் என ஷாருக்கான் பதான் பட ஹீரோயினை இங்கேயும் அழைத்து வந்து விட்டாராம்.

 

திடீரென ஷாருக்கானே திரைக்கதையை இஷ்டத்துக்கு மாத்துறாரே, தீபிகா படுகோனுக்கான சீனே என்கிட்ட இல்லையே என படபடத்து போய் விட்டாராம் அட்லி. எதையாவது வைத்து மேனேஜ் பண்ணி எடுப்பா, இல்லைன்னா ஒரு பாடல் காட்சியையாவது எடுத்து இடையே சொருகி விட வேண்டியது தானே என ஷாருக்கான் கூலாக சொல்ல அட்லிக்கு ரொம்பவே வியர்த்து போய்விட்டதாகவும், எப்படியோ மேட்ச் செய்து தீபிகா படுகோனின் போர்ஷன்களை எடுத்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

டார்லிங் என நயன்தாராவை செல்லமாக அழைத்து வரும் இயக்குநர் அட்லி தாய்லாந்தில் ஹனிமூன் கொண்டாடி வரும் நயனுக்கே போன் அடித்து கொஞ்சம் சீக்கிரம் வந்துடுங்க இல்லைன்னா நீங்க வரும்போது படமே வேறமாறி மாறிடும் போலன்னு சொல்லி புலம்பியதாக தகவல்கள் பரவி வருகின்றன.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top