பாலிவுட் பாட்ஸா என அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் வாடகை வீட்டில் குடியேறியிருக்கும் தகவல் தெரியவந்துள்ளது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான். வசூல் கிங்காக அவரின் சமீபத்திய படங்கள் ஹிட் அடித்து வருகிறது. இதற்கிடையே, ஷாருக் கான் குடும்பம் வாடகை வீட்டில் குடியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பையிலேயே புகழ்பெற்ற இல்லம் என்றால் மன்னத் இல்லம் தான். ஷாருக் கான் வசிக்கும் மன்னத் இல்லத்தில் அவரை காண தினமும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடுவது வழக்கம். அந்த இல்லத்தில் ரசிகர்கள் முன்பு ஷாருக் கான் தனது பேமஸான போஸ் கொடுப்பது அடிக்கடி நிகழும் ஒன்று. அதனால் மும்பையிலேயே புகழ்பெற்ற இல்லமாக மன்னத் இல்லம் விளங்குகிறது.
இந்த மன்னத் இல்லத்தில் இருந்து தான் தற்போது ஷாருக் கான் குடும்பம் வெளியேறியிருக்கிறது. தற்போது மும்பையின் பாந்த்ராவின் பாலி ஹில் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பில் ஷாருக் கான் குடும்பம் வாடகைக்கு வசித்து வருகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்த வீடு தான் ஷாருக்கானின் தற்காலிக வீடாக செயல்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.

ஷாருக்கானின் மனைவி கௌரி கான் மற்றும் குழந்தைகள் சுஹானா, ஆர்யன் மற்றும் ஆப்ராம் உள்ளிட்ட கான் குடும்பத்தினர் இந்தக் கட்டிடத்தின் நான்கு தளங்களில் வசிப்பார்கள். அவர்களுடன் அவர்களின் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களை தங்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்கு தளங்களுக்கான மொத்த வாடகை மாதத்திற்கு ரூ.24 லட்சம் என்று கூறப்படுகிறது.
திடீரென புதிய வீட்டுக்கு அதுவும் வாடகை வீட்டில் குடியேற காரணம், மன்னத் இல்லத்தில் புதுப்பிக்கும் பணிகள் நடக்கவிருக்கிறதாம். புதுப்பிப்பு பணிகள் மே மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வீட்டை பராமரிக்க தேவைப்படும் என்பதால் வாடகை வீட்டுக்கு மாறியுள்ளனர். ஷாருக்கானின் மகன் இயக்குநராக அவரதராம் எடுத்துள்ள நிலையில், அவரின் குடும்பம் பாரம்பரிய வீட்டை விட்டு புது வீட்டுக்கு குடியேறி இருப்பது கவனம் ஈர்த்துள்ளது.