ஒரு 'புல்' பாட்டில் ரூ.6300 மட்டுமே.. ஷாருக்கானின் புது பிசினெஸ் அமோகம்..!

by Giri |   ( Updated:2025-04-02 08:47:09  )
ஒரு புல் பாட்டில் ரூ.6300 மட்டுமே.. ஷாருக்கானின் புது பிசினெஸ் அமோகம்..!
X

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தொடங்கியுள்ள புது பிசினெஸ் அவருக்கு வெற்றிகரமாக அமைந்துள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் திரைப்படங்களில் நடிப்பதோடு படங்களை தயாரிப்பு, ஐ.பி.எல். கிரிக்கெட் பல தொழில்களில் ஆர்வமுடன் செயல்பட்டு வருகிறார். அவர் தேர்ந்தெடுக்கும் அனைத்துக் தொழில்களும் வெற்றிகரமாக அமைந்துள்ளன. சமீபத்தில் அவர் நடித்த படம் ஆயிரம் கோடி வசூல் செய்தது. இது தமிழ் இயக்குநர் அட்லீ இயக்கிய ஜவான் படம் சாத்தியமானது. தற்போது ஷாருக்கான் சத்தமின்றி புதிய தொழிலில் முன்னேறி வருகிறார். அவர் மது விற்பனைத் துறையில் புதிய முயற்சியை தொடங்கியுள்ளார். இந்த வியாபாரத்தில் அவரது மகன் ஆர்யன் கானையும் சேர்த்துக்கொண்டுள்ளார். டி'யாவோல் என்ற பிராண்டின் கீழ் மது வகைகளை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளார்.

கடந்த ஆண்டுதான் ஷாருக்கான் இத்தொழிலில் தனது மகனுடன் இணைந்து இறங்கினார். இதற்குள் அவரது பிராண்ட் மதுபானங்கள் சர்வதேச அளவில் பிரபலமானது. ஜெர்மனியின் பெர்லினில் நடந்த சர்வதேச மது போட்டியில் ஷாருக்கான் நிறுவனத்தின் மது வகைகளும் பங்கேற்றன.

இதில் ஷாருக்கானின் கம்பெனி மது வகைகள் 100-க்கு 95 சதவீத புள்ளிகளை பெற்று தங்கப்பதக்கம் பெற்றது. அதேபோல், கடந்த ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த சர்வதேச மது போட்டியிலும் ஷாருக்கானின் டி'யாவோல் பிராண்டின் ஸ்காட்ச் விஸ்கி சிறந்த பிராண்ட் மதுபானம் என்ற விருதை பெற்றது. ஷாருக்கான் நிறுவனம் மூன்று வகையான மது வகைகளை விற்பனை செய்து வருகிறது.

shahrukh khan

அதில் டி'யாவோல் சிங்கில் எஸ்டேட் வோட்கா ஒரு பாட்டில் ரூ.5000-க்கு விற்பனை ஆகிறது. அதே சமயம், விஸ்கி ரூ.6300-க்கு விற்பனை ஆகிறது. டி'யாவோல் பிரமியம் ஸ்காட்ச் விஸ்கி மகாராஷ்டிராவில் ரூ.5350க்கும், கோவாவில் ரூ.4500க்கும் விற்பனை ஆகிறது. ஏற்கெனவே ஷாருக்கான் பல பொருள்களின் பிராண்ட் விளம்பரங்களில் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். குட்கா விளம்பரத்தில் நடிக்க சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், "குட்கா தயாரிப்பதை நிறுத்துங்கள். என்னை வேலை செய்ய விடாமல் தடுக்காதீர்கள்," என்று கூறிய அவர், குட்கா விளம்பரத்தில் நடிப்பதை நிறுத்த மறுத்துவிட்டார்.

என்னதான் பிசினெஸ் என்றாலும் மது விற்பனை என்பது சற்று ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சமூகத்தில் பலருக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கக் கூடிய ஷாருக்கான் மது விற்பனை தொழில் செய்வது அவர்களை தவறாக வழிநடத்த வழிவகுக்கக் கூடும் என்று கூறுகின்றனர். அதுவும், இஸ்லாமியரான ஷாருக்கான், குரானில் ஹராம் எனச் சொல்லப்பட்டுள்ள மதுவை விற்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று குமுறுகின்றனர்.

Next Story