12 வருடங்களுக்கு முன்பு நடித்த யோகி பாபு… ஞாபகம் வைத்து வரவேற்ற ஷாருக் கான்… என்ன மனுஷன்யா!!
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வரும் யோகி பாபு, தற்போது தமிழில் “வாரிசு”, “ஜெயிலர்” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் “மண்டேலா”, “தர்மபிரபு”, “கூர்கா” போன்ற திரைப்படங்களில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது பாலிவுட்டில் அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடிப்பில் உருவாகி வரும் “ஜவான்” திரைப்படத்தில் யோகி பாபு நடித்து வருகிறார். இதற்கு முன் 2013 ஆம் ஆண்டு ஷாருக் கான், தீபிகா படுகோன் ஆகியோரின் நடிப்பில் பாலிவுட்டில் வெளிவந்த “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில், யோகி பாபு ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட யோகி பாபு, ஷாருக் கானுடன் நடித்த அனுபவங்களை குறித்து பகிர்ந்துகொண்டார். அதாவது யோகி பாபு, “ஜவான்” திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக மும்பைக்குச் சென்றாராம். அங்கே படப்பிடிப்புத் தளத்தில் ஷாருக் கான், யோகி பாபுவை பார்த்து “வெல்கம் பேக் டூ பாலிவுட் ஆஃப்டர் 12 இயர்ஸ்” என கூறி வணக்கம் வைத்து வரவேற்றாராம்.
பல வருடங்களுக்கு முன்பு “மும்பை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் நடித்த யோகி பாபுவை இத்தனை வருடங்கள் கழித்தும் ஷாருக் கான் ஞாபகம் வைத்திருந்தது யோகி பாபுவை ஆச்சரியப்படுத்தியதாம்.
இதையும் படிங்க: “இனி எந்த படமும் ரிலீஸ் கிடையாது”… உஷார் ஆகும் ஓடிடி நிறுவனங்கள்… என்ன காரணம் தெரியுமா?
அட்லி இயக்கி வரும் “ஜவான்” திரைப்படத்தில் யோகி பாபு, நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி ஆகியோர் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்திரைப்படம் அடுத்த வருடமான 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் தேதி வெளிவரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.